மும்பையின் தாராவி பகுதியை மேம்படுத்தும் திட்டத்துக்கு அதானி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கு 5 கோடி ரூபாய் என நிறுவனம் ஏலக் குத்தகையில் குறிப்பிட்டிருந்தது.
ஆசியாவிலேயே அதிக குடிசைகளைக்கொண்ட பகுதியாக தாராவி கருதப்படுகிறது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த பகுதியில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் மிகவும் நெரிசலான சூழ்நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.பல தமிழர்களும் இங்கு வாழ்ந்துவருகின்றனர்.
இந்தப் பகுதியை மேம்படுத்தும் யோசனை முதலில் 1980களில் முன்வைக்கப்பட்டது. மும்பையின் மையப் பகுதியில் உள்ள தாராவியில் முறையான வீடுகள், வர்த்தக வசதிகள் ஆகியவற்றை கட்ட திட்டம் உள்ளது.

