கடைவீட்டில் மூண்ட தீயில் ஆறு பேர் பலி

கடைவீட்டில் மூண்ட தீயில் ஆறு பேர் பலி

1 mins read
5460a16d-808d-430e-9c40-4efbd853297c
-

ஃபிரோசா­பாத்: உத்­த­ரப்­பி­ர­தே­ச மாநிலத்­தின் ஃபிரோசா­பாத் மாவட்­டத்­தில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு கடையுடன் இருந்த வீட்­டில் திடீ­ரென தீமூண்­ட­தில் மூன்று குழந்­தை­கள் உட்­பட ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த ஆறு பேர் உயி­ரி­ழந்­த­தாக மூத்த காவல் கண்­கா­ணிப்­பா­ளர் ஆஷிஷ் திவாரி தெரி­வித்­துள்­ளார்.

தீக்காயங்­க­ளு­டன் மூவர் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

ஃபிரோசா­பாத் நக­ரில் மின்­னி­யல் மற்­றும் நகைக்­கடையை ராமன்குமார் என்­ப­வர் நடத்தி வந்து உள்ளார். கடைக்கு மேலே உள்ள முதல்தளத்­தில் அவரது குடும்­பத்­தினர் வசித்து வந்­துள்ளனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

18 தீய­ணைப்பு வாக­னங்­கள் தீயை அணைக்­கும் பணி­யில் ஈடு பட்­டன. ஃபிரோசா­பாத் மாவட்­டம், ஜஸ்­ரா­னா­வில் நடந்த இந்தச் சம்­ப­வம் குறித்து முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் ஆழ்ந்த இரங்­கல் தெரிவித்து உள்ளார். தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குண மடைய பிரார்த்திப்பதாகவும் பாதிக் கப்பட்டவர்களின் குடும்பங் களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்கவும் அவர் உத்தர விட்டுள்ளார்.