விலை குறைந்ததை அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அறிவிப்பு அரிசி ஏற்றுமதி தடை விலகியது

விலை குறைந்ததை அடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அறிவிப்பு அரிசி ஏற்றுமதி தடை விலகியது

2 mins read
6c28bad4-f17f-4ed4-8f68-820448b31d91
இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள கடதே கிராமத்தில் தன் வயலில் விளைந்த நெற்பயிர்களைப் பார்வையிடுகிறார் ஒரு விவசாயி. படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: இயற்கை முறை­யில் விளை­விக்­கப்­பட்ட 'ஆர்­கா­னிக்' ரக அரி­சி, உடைந்த இட்லி அரிசி, நொய் அரிசிகளை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்­திய அரசு நீக்­கி­யுள்­ளது.

இந்த அரி­சி ரகங்­க­ளின் விலை குறைந்துள்­ள­தைத் தொடர்ந்து இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்­ளன.

பாஸ்­மதி அல்­லாத 'ஆர்­கா­னிக்' அரிசி, குருணை அரிசி ரகங்­களின் ஏற்­று­ம­திக்கு மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு விதிக்­கப்­பட்டிருந்த தடையை இந்­திய அரசு நீக்­கி­யுள்­ள­தாக வெளி­நாட்டு வர்த்­தக இயக்­கு­ந­ர­கம் (டிஜி­எ­ஃப்டி) அதி­கா­ர­பூர்வமாக தெரி­வித்­துள்­ளது.

அரிசி தட்­டுப்­பாடு ஏற்­ப­ட நேரி டும் என்ற அச்­சம் விலகியதை அடுத்து, இந்தத் தடை நீக்­கப்­பட்­டுள்­ளதாகவும் அது கூறியுள்ளது.

உலக அள­வில் சீனா­வுக்கு அடுத்­ததாக இரண்டாவது இடத்தில் அரிசி ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா.

இந்­தியாவில் இருந்து 150 நாடு­க­ளுக்கு அரி­சி ஏற்­று­மதி செய்­யப் பட்டு வரும் நிலையில், உல­கின் மொத்த அரிசி ஏற்­று­ம­தி­யில் இந்­தி­யா­வின் பங்­க­ளிப்பு 40 விழுக் காடாக உள்ளது.

2021-22ஆம் ஆண்­டில் இந்­தியா 21.1 டன் அரிசியை ஏற்­று­மதி செய்­திருந்தது என்றாலும், இந்தியாவில் சாகு­படி செய்­யப்­படும் வயல்­க­ளின் பரப்­ப­ளவு ஆறு விழுக்காடா­கக் குறைந்­துவிட்டதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து, 2022-23ஆம் ஆண்­டில் அரிசி உற்­பத்தி கணி­ச­மாகப் பாதிக்­கப்படும் சூழல் உள்ள தாக முன்னுரைக்கப்பட்டதால், முன்னெச்சரிக்கையாக நெல், அரிசி ஏற்­று­மதிக்கு மத்­திய அரசு தடை விதித்திருந்­தது.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உள்­நாட்டுச் சந்­தை­யில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரி­சி­க­ளின் விலையும் உயர்ந்­த­து.

இதைத்தொடர்ந்து, குருணை அரி­சி­யின் உள்­நாட்டுப் புழக்­கத்தை அதி­க­ரிக்க அதன் ஏற்­று­ம­திக்கு கடந்த செப்­டம்­பர் மாதம் மத்­திய அரசு தடை விதித்­தது.

இந்தச் சூழலில் இப்போது 'ஆர்­கா­னிக்' அரி­சி, குருணை அரிசி ஏற்­று­ம­திக்­கான தடையை மத்­திய அரசு விலக்கிக்கொண்டு உள்ளது. குறிப்பிட்ட இந்த அரிசி களின் விலை குறைந்துள்ளதைத் தொடர்ந்து, இம்முடிவை எடுத்துள்ள தாகவும் அரசு தெரிவித்துள்ளது.