திருப்பதி: திருப்பதி ரயில் நிலை யத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விரைவு ரயிலுக்கு சந்தேகப் பேர்வழிகள் சிலர் தீ வைத்தனர்.
திருப்பதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு வழக்கம்போல் நேற்று காலை 5.30 மணிக்கு திருமலா விரைவு ரயில் புறப்படத் தயாராக இருந்த நிலையில், 'எஸ்-6' பெட்டியில் உள்ள கழிவறையில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. இதைக்கண்டு அதிர்ந்த பயணிகள் கூச்சலிட்டபடி அவசர அவசரமாக தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடினர்.
இதைப்பார்த்து பக்கத்துப் பெட்டிகளில் இருந்த பயணி களும் இறங்கினர்.
இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே காவலர்களும் அதிகாரி களும் புகை வந்த கழிவறையைத் திறந்துபார்த்தபோது, தீ மளமள வென எரிந்துகொண்டிருந்தது. உடனடியாக அங்கிருந்த தீத்தடுப்பு கருவிகளைக் கொண்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசா ரணையில், கழிவறைக்குச் சென்ற வர்கள் சிகரெட் பிடித்துவிட்டு அங்கிருந்த குப்பைகளுக்கு தீ வைத்துவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதனால் கழிவறை எரிந்து நாசமானது. இதுகுறித்து திருப்பதி ரயில்வே காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

