புதுடெல்லி: அமெரிக்காவில் கல்வி கற்க நடப்பு ஆண்டில் மட்டும் 82,000 இந்தியர்களுக்கு விசா அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க பொறுப்பு தூதர் எலிசபெத் ஜோன்ஸ், அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அரசு இறங்கி உள்ளது என்றார்.
"உலகளவில் அமெரிக்கா செல்வதற்கான, குறிப்பாக தொழில் முறை பயணத்துக்கான பி1, சுற்றுலாவுக்கான பி2 விசாக்களைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
"இதனைக் குறைப்பதற்காக வாஷிங்டனில் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது," என்றார்்்்் தூதர் எலிசபெத் ஜோன்ஸ்.
இந்தியாவில் அதிகளவு விசா வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட தூதர் எலிசபெத் ஜோன்ஸ், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் கூடுதல் விசா வழங்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் நடப்பாண்டில் 82,000 இந்தியர்களுக்கு மாணவர் விசா வழங்கப்பட்டுள்து என்றும் தெரிவித்தார்.