புதுடெல்லி: உலகளாவிய பாது காப்பான விமானப் போக்குவரத் துக்கான தரவரிசைப் பட்டியலில் 102வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 48வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்தப் பட்டியலை அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்திலும் ஐக்கிய அரபு சிற்றரசு, தென் கொரியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன என்றும் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா 49வது இடத்தில் உள்ள தாகவும் மேலும் தெரிவித்தனர். 102வது இடத்தில் இருந்து 48வது இடத்திற்கு முன்னேறியிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.