முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வரதட்சணை வாங்க மாட்டேன் என புதிய புரட்சி செய்துள்ளார்.
பெண்ணின் பெற்றோர் மனம் நோகக் கூடாது என்பதற்காக, ஒரு சடங்குக்காக அவர்களது குடும்பத்தினரிடம் ஒரு ரூபாய் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு திருமணம் செய்துள்ளார்.
பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணையாகக் கொடுத்த 11 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் தங்க நகைகளையும் உறவினர்கள் மத்தியில் திருமண மேடையிலேயே பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லகான் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரப் சவுகான். வருவாய்த் துறை அதிகாரியான இவருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
இவரது இந்தச் செயலால், 'ஆண்களின் முன்மாதிரி' என பலரும் இவரைப் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.

