எத்தனால் கலப்பால் ரூ.20,000 கோடி சேமிப்பு

எத்தனால் கலப்பால் ரூ.20,000 கோடி சேமிப்பு

1 mins read
8f0689b5-1f22-4bf8-9664-a15d6bf5f2ac
-

புதுடெல்லி: கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா அதிக அளவில் செலவு செய்துவரும் நிலையில், அதைக் குறைப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது.

நாடு முழுவதும் எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் சேமிக்கப்படும் அந்நியச் செலாவணி மதிப்பு ரூ. 20 ஆயிரம் கோடி என்று நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி தெரிவித்துள்ளார்.

"எத்­த­னால் கலந்த பெட்­ரோல் மூலம் சேமிக்­கப்­படும் அந்­நி­யச் செலா­வணி மதிப்பு குறித்து உறு­தி­யான தக­வல்­கள் கிடைக்­க­வில்லை. இருப்­பி­னும் இந்த ஆண்டு நவம்­பர் வரை ரூ. 20 ஆயி­ரம் கோடி வரை சேமிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது," என்று அவர் கூறி­னார்.

ஹரி­யானாவின் பானி­பட்­டில் 2ஜி எத்­த­னால் உற்­பத்தி நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. பஞ்­சாப், ஒடிசா, அசாம் ஆகி­ய­வற்­றி­லும் எத்­த­னால் நிலை­யங்­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

இந்­தி­யா­வில் மாற்று எரி­பொ­ருள்­கள் பயன்­பாட்­டுக்குத் தொடர்ந்து ஊக்­கம் அளிக்­கப்­ ப­டு­வ­து­டன், உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.