புதுடெல்லி: மத்திய அரசிடம் இருந்து வாங்கிய ஏர் இந்தியா விமானங்களைப் புதுப்பிக்க முனைந்துள்ளது டாடா நிறுவனம்.
அனைத்து வகுப்புகளிலும் நவீன வடிவமைப்பில் இருக்கைகள் உள்பட சிறப்பான பயண அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் விமானத்தின் உள்புற வடிவமைப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஏறக்குறைய ரூ.3,200 கோடி செலவில் இந்த புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக லண்டனைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.
'விகான்.ஏஐ' திட்டத்தின் கீழ், உலகத் தரம் வாய்ந்த விமான நிறுவனத்திற்கு ஏற்ற தயாரிப்பு மற்றும் சேவையின் மிக உயர்ந்த தரத்தை அடைய ஏர் இந்தியா நிறுவனம் உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி கேம்பல் வில்சன் கூறியுள்ளார்.