போபால்: ஹெலிகாப்டர் பயணத்துக்கு ஏற்பாடு செய்வதாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூன்று சிறுமி களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளார் ராகுல் காந்தி.
அண்மையில் தாம் மேற்கொண்ட பாத யாத்திரையின்போது மூவரையும் சந்தித்தார் ராகுல்.
9, 10ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளான மூவரும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய விரும்புவதாக அவரிடம் கூறி இருந்தனர்.
அதை நிறைவேற்றுவதாக ராகுல் உறுதி அளித்திருந்தார். அதன்படி, நேற்று முன்தினம் மூன்று மாணவிகளுக்காகவும் ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்தார். மாணவிகள் இதனால் மிகுந்த உற்சாகமடைந்தனர்.

