தற்காப்பு ஏற்றுமதிகள்: இந்தியா புது சாதனை

தற்காப்பு ஏற்றுமதிகள்: இந்தியா புது சாதனை

1 mins read
0c30aeba-c377-4dfb-b5a5-16d2835563e8
-

2021-22ல் வரலாறு காணாத அளவுக்கு ரூ.14,000 கோடிக்கு ஏற்றுமதி

புது­டெல்லி: இந்­தி­யா­வின் தற்­காப்பு ஏற்­று­ம­தி­கள் இது­வரை இல்­லாத அள­வுக்கு 2021-22ல் ரூ.14,000 கோடி­யாக அதி­க­ரித்து இருக்­கிறது. தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் வெள்­ளிக்­கி­ழமை இதை தெரி­வித்­தார்.

தோழ­மை­ வெளி­நா­டு­களுக்கு ராணுவ கன­ரக சாத­னங்­களை அதி­கம் ஏற்­று­மதி செய்ய ஏது­வாக அர­சாங்­கக் கொள்­கை­கள் மாற்றி அமைக்­கப்­பட்டுள்ளன.

இதன் பலன்­கள் இப்­போது கைகூடி வரு­கின்­றன என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

தற்­காப்­புத் துறை ஏற்­று­மதி 2014ல் ரூ.900 கோடி­யாக இருந்­தது என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அடுத்த ஆண்­டில் அந்த ஏற்று­மதி­கள் ரூ.19,000 கோடியை எட்டும். 2025வது ஆண்டு வாக்­கில் ரூ.25,000 கோடி மதிப்­புள்ள தற்­காப்பு தயா­ரிப்­புப் பொருள்­களை ஏற்­று­மதி செய்ய வேண்­டும் என்பது இப்­போ­தைய இலக்கு என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

'இந்­தி­யா­வில் தயா­ரிப்­போம்', 'உல­கிற்­காக தயா­ரிப்­போம்' என்ற தாரகமந்­தி­ரத்தை ஒட்டி வெளி­நாட்டு நிறு­வ­னங்­களை புது­டெல்லி அழைத்து வரு­கிறது.

அதே­வே­ளை­யில், நாட்­டின் வளர்ச்­சி­யில் தீவிர ஈடு­பாடு கொள்ளும்­படி தனி­யார் துறையை அர­சு ஊக்­கு­வித்து வரு­வ­தா­க­ டெல்­லி­யில் அமைச்­சர் கூறினார்.

ஏற்­று­ம­தி­யில் சாதனை படைத்து இருக்­கும் அதே­வே­ளை­யில், இந்­தியா தற்­காப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் சுய­சார்­பு­டன் திகழ வேண்­டும் என்­ப­தி­லும் அரசு தீவி­ர­மாக ஈடு­பட்டு வரு­கிறது என்றாரவர்.