மாயமாகும் தாஜ்மகால் கற்கள்

மாயமாகும் தாஜ்மகால் கற்கள்

1 mins read
12d96b97-f236-4fda-b7c3-0a1e331f9e9a
-

ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில், அதன் பொலிவைக் கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் உள்ளன. அந்தக் கற்களில் வெள்ளை கற்கள் விலை உயர்ந்தவை.

ஆனால் அந்தக் கற்கள் ஒவ்வோர் ஆண்டும் காணாமல் போகின்றன.

முகலாயர் காலத்து நினைவு சின்னமான தாஜ்மகாலைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள இந்திய தொல்லியல் துறை, காணாமல் போகும் கற்களுக்குப் பதிலாக புது கற்களைப் பதித்து வருகிறது.

இதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை ரூ.2.5 கோடி அளவுக்கு பணம் செலவிட்டு பல பகுதிகளில் கற்களை நிறுவி வருகிறது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்குக் கிடைத்த பதில் மூலம் தெரியவந்துள்ளது.