திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த ஜெய்சங்கர்-கிரீஷ்மா தம்பதியர், மணக்கோலத்தில் ஒரு கோயிலில் படம் எடுத்துக்கொண்டனர்.
அதைக் கண்காணித்து வந்த அந்தக் கோயிலின் சரவணன் என்ற யானைக்குக் கோபம் வந்து அருகே கிடந்த தென்னை மட்டை யைத் தூக்கி வீசி எறிந்து தம்பதியைத் தாக்கியதாக் கூறி அதைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் உலா வருகிறது.
ஆனால் கிரீஷ்மா எப்போதும் சரவணனுக்குப் பழம் கொடுப்பார் என்றும் ஆனால் கடந்த 5ஆம் தேதி அவர் பழம் கொடுக்காமல் போனதால் யானைக்குப் கோபம் வந்து தாக்கியதாகவும் கூறப்படு கிறது.
யானை வைத்த குறி தவறி விட்டது என்றும் தம்பதிக்குக் காயம் இல்லை என்றும் தெரி விக்கப்பட்டது. படம்: ஊடகம்

