புதிய ரயிலில் சீட்டு வாங்கி மோடி பயணம்

புதிய ரயிலில் சீட்டு வாங்கி மோடி பயணம்

1 mins read
c56b55e0-c207-4141-aa6a-5c0c22bb55d8
-

மும்பை: பிர­த­மர் நரேந்­திர மோடி மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் நேற்று ரூ.75,000 கோடி மதிப்­பி­லான பல்­வேறு திட்­டங்­களைத் தொடங்­கி­வைத்­தார்.

அத்­திட்­டங்­களில் ஒன்­றான நாக்பூர் மெட்ரோ ரயில் திட்­டத்­தின் ஒரு பகுதி­யாக, நாட்­டின் 6வது வந்தே பாரத் ரயிலை நாக்­பூர்-பிலாஸ்­பூர் இடையே அவர் கொடி அசைத்து தொடங்­கி­வைத்­தார்.

பிறகு அவர் அந்த ரயி­லில் பய­ணச்­சீட்டு வாங்கி பய­ணம் செய்து பல­ரோ­டும் கலந்­து­ரை­யா­டி­னார். நாக்­பூர் ரயில் திட்­டத்­தைக் காட்டும் கண்­காட்­சி­யை­யும் அவர் பார்­வை­யிட்­டார்.

அந்த ரயில் திட்­டத்­தின் முதல் கட்­டம் 40 கி.மீ. தொலை­வுக்கு அமை­கிறது. அதில் 36 ரயில் நிலை­யங்­கள் இருக்­கும்.

அத்­திட்­டத்­தின் 2ஆம் கட்­டப் பணி­க­ளுக்­குப் பிர­த­மர் அடிக்­கல் நாட்­டி­னார். நாக்­பூர் ரயில் திட்­டத் தின் முதல் கட்­டம் ரூ. 8,650 கோடி செல­வில் அமை­கிறது என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இரண்­டாம் கட்­டப் பணி­கள் ரூ.6,700 கோடி செல­வில் 43.8 கி.மீ. தொலை­வுக்கு நிறை­வேற்­றப்­படும். இதில் 32 நிலை­யங்­கள் அமைந்து இருக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பிரதமர் மிகான் பகு­தி­யில் கட்­டப்­பட்­டுள்ள எய்ம்ஸ் மருத்­துவ மனையை திறந்துவைத்தார்.

இந்த மருத்­து­வ­ம­னைக்கு பிர­த­மர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அடிக்­கல் நாட்­டினார்.

திரு மோடி, மும்பை-நாக்பூர் இடையேயான சம்­ருத்தி நெடுஞ்­சா­லைத் திட்­டத்­தின் முதல் கட்டத்தை­யும் நேற்று தொடங்கி வைத்­தார்.