500 விமானங்களை வாங்க டாடா திட்டம்

500 விமானங்களை வாங்க டாடா திட்டம்

2 mins read
7bfa8fd3-fc32-4ee0-8566-cbdf618e38e1
-

புது­டெல்லி: ஏர் இந்­தி­யாவை எடுத்து நடத்­தி­வ­ரும் டாடா குழு­மம், 500 விமா­னங்­களை வாங்க திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. உல­கின் இரு பெரிய விமான நிறு­வ­னங்­க­ளான ஏர்­பஸ், போயிங் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து 500 விமா­னங்­களை வாங்க வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தரு­விப்பு உத்­த­ரவை டாடா பிறப்­பித்துள்ள­தா­கக் கூறப்­ ப­டு­கிறது.

இவற்­றில் 400 நீண்ட விமா­னங்­களும் 100க்கும் மேற்­பட்ட அகண்ட விமா­னங்­களும் ஏர் இந்­தியா வாங்குவ­தாக ராய்ட்­டர்ஸ் தக­வல் தெரி­விக்­கிறது. இதன் மதிப்பு நூறு பில்­லி­யன் டாலர் இருக்­கும். ஒரே விமான நிறு­வ­னம் இவ்­வ­ளவு விமா­னங்­களை வாங்­கு­வது இதுவே முதல் முறை என்று நம்­பப்­ப­டு­கிறது.

இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய விமா­னச் சேவை நிறு­வ­ன­மாக மாறி வரும் ஏர் இந்­தியா, அண்­மை­யில் அதன் தாய் நிறு­வ­ன­மான டாடா குழு­மத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் அனைத்து விமா­னச் சேவை நிறு­வ­னங்­களை ஒன்­றாக இணைக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்டு வருகிறது. அதில் வெற்­றி­யும் பெற்று வரு­கிறது.

அடுத்த ஆண்­டுக்­குள் இந்த இணைப்­பு­கள் முடி­வுக்கு வர­வி­ருக்­கின்றன. இத­னால் இந்­தி­யா­வுக்­குள் அதிக­ இடங்­களுக்கும் வெளி நா­டு­க­ளில் அதி­க இடங்­க­ளுக்­கும் விமா­னப் போக்­கு­வ­ரத்து சேவை அளிக்­கும் நிறு­வ­ன­மாக 'ஏர் இந்­தியா' உரு­வெ­டுத்­துள்­ளது.

அது மட்­டு­மல்­லா­மல் மலிவு விலை விமா­னச் சேவை, எக்ஸ்­கி­யூட்­டிவ் விமா­னச் சேவை வரை அனைத்து வித­மான சேவை­க­ளை­யும் பய­ணி­க­ளுக்கு வழங்­கும் நிறு­வ­ன­மாக அது மாறி வரு­கிறது.

மேலும் மத்­திய அர­சி­டம் பெரும் தொகை கொடுத்து வாங்­கிய ஏர் இந்­தி­யாவை விரை­வில் லாப­க­ர­மான நிறு­வ­ன­மாக மாற்ற வேண்­டும் என்­ப­தில் டாடா சன்ஸ் தலை­வர் என் சந்­தி­ர­சே­க­ரன் தீவி­ர­மாக உள்­ளார்.

இருந்தாலும் 500 விமானங்கள் வாங்குவது குறித்து டாடா, ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறு வனத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் டாடா குழுமம் வெற்றி அடைந்த நிலையில் டாடா குழுமம், தற்போது ஏர் இந்தியா என்னும் ஒரு நிறுவனத்தின் கீழ் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று நிறு வனங்களையும் இணைத்து நாட்டின் 2வது பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்த்த உள்ளது.

இந்த இணைப்புக்குப் பிறகு மொத்தம் 217 விமானங்களுடன் ஏர் இந்தியா மாபெரும் நிறுவனமாக செயல்படவிருக்கிறது.

விமான நிலையத்தில்

குழப்பம், நெரிசல்

இதற்கிடையே டெல்லி விமான நிலையத்தில் கூட்டமும் குழப்பமாக இருப்பதாகவும் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருக்க நேரிடு கிறது என்றும் வலைத் தளங்களில் புகார்கள் பரவியதால் நேற்று அந்த விமான நிலையத்துக்கு திடீர் வருகையளித்த மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நிலை மையை நேரில் கண்டறிந்தார்.