தெலுங்கானா கட்சித் தலைவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தெலுங்கானா கட்சித் தலைவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

2 mins read
2f7e191e-7d1a-4f3e-bd4f-031b61dffc8b
-

ஐத­ரா­பாத்: தெலுங்­கா­னா­வில் பாத யாத்­திரை மேற்­கொள்ள அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் கால­வ­ரை­யின்றி உண்­ணா­வி­ர­தம் மேற்­கொண்ட 'ஒய்­எஸ்­ஆர்' தெலுங்­கானா கட்­சித் தலை­வர் ஒய்.எஸ்.ஷர்­மி­ளாவை காவல்­து­றை­யி­னர் வலுக்­கட்­டா­ய­மாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர்.

வெள்­ளிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து உண்­ணா­வி­ர­தம் இருந்து வந்த அவ­ரது உடல்­நிலை மோச­மா­ன­தால் ஞாயிற்­றுக் கிழமை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்பட்­டார்.

ஆந்­திர முதல்­வர் ஜெகன் மோகன் ரெட்­டி­யின் இளைய சகோ­த­ரி­யான ஒய்.எஸ்.ஷர்­மிளா கடந்­தாண்டு ஜூலை­யில் தனது தந்தை ஒய்.எஸ்.ராஜ­சே­கர ரெட்டி பிறந்த நாளில் ஒய்­எஸ்­ஆர் தெலுங்­கானா கட்­சியைத் தொடங்­கி­னார்.

கடந்­தாண்டு அக்­டோ­பர் மாதம் முதல், இவர் தெலுங்­கா­னா­வில் பாத யாத்­திரை மேற்­கொண்டு மக்­கள் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்து வரு­கி­றார். கடந்த மாதம் இறு­தி­யில் வாரங்­கல் மாவட்­டத்­தில் இவர் பாத யாத்­திரை மேற்­கொண்­ட­போது, இவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கும் தெலுங்­கானா ராஷ்­டிரிய சமிதி கட்சியி­ன­ருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது. இதற்கு எதிர்ப்பு தெரி­வித்த ஷர்­மிளா, முதல்­வர் சந்­தி­ர­சே­கர ராவ் இல்­லம் நோக்கிப் புறப்பட்டார். காவல்­து­றை­யி­னர் அவரை தடுத்து­ நி­றுத்­து­வ­தற்­காக அவ­ரது வாக­னத்தைப் பளு­தூக்கி மூலம் இழுத்­துச் சென்­ற­னர்.

இது தொடர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­ய­தால் பர­ப­ரப்­பா­னது.

இந்த நிலை­யில் பாத யாத்­தி­ரைக்கு அனு­மதி தராத காவல் ­து­றையைக் கண்­டிக்­கும் வகை­யில் உசைன் சாகர் ஏரி அரு­கே, அம்­பேத்­கர் சிலை முன்பு கடந்த வெள்ளிக்கி­ழமை அவர் உண்­ணா­வி­ர­தம் இருக்க முயற்சி செய்­தார். இதற்­கும் அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தால் தனது கட்சி தலை­மை­ய­கத்­தில் அவர் முடிவில்லா உண்­ணா­வி­ர­தத்தைத் தொடங்­கி­னார்.

தண்­ணீர் கூட குடிக்­கா­மல் அவர் உண்­ணா­வி­ர­தம் இருந்­த­தால் அவ­ரது உடல்­நிலை மோச­மா­னது.

இந்த நிலை­யில் ஞாயிறு அதி­காலை ஒரு மணி­ய­ள­வில், அவரை காவல்­து­றை­யி­னர் வலுக்­கட்­டா­ய­மாக மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

ஷர்­மி­ளா­வின் ரத்த அழுத்­தம், குளுக்­கோஸ் அளவு மிக­வும் குறைந்து நீர்ச்­சத்து இழப்பு ஏற்­பட்டு உள்­ள­தால் உடல்­நிலை பாதிக்­கும் அபாயம் இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் கூறியுள்ளனர்.