அகமதாபாத்: குஜராத் பொதுத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று உள்ளதால் அக்கட்சியைச் சேர்ந்த பூபேந்திர பட்டேல் 18வது முதல்வராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆளுநர் ஆச்சாரிய தேவ்ரத் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

