'ராகிங்' மாணவர்களைக் கண்டுபிடிக்க மாறு வேடத்தில் சென்ற பெண் அதிகாரி

'ராகிங்' மாணவர்களைக் கண்டுபிடிக்க மாறு வேடத்தில் சென்ற பெண் அதிகாரி

2 mins read
1110cca0-16c2-46ad-b9ec-e02bd7701580
-

இந்­தூர்: இளம்பெண் காவல் அதிகாரி ஒருவர், இந்­தூ­ரில் உள்ள எம்­ஜி­எம் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் மாணவிபோல நடித்து 'ராகிங்' செய்த மாண­வர்­க­ளை அடையாளம் கண்டுபிடித்துள்ளார்.

தன்னை முதல் ஆண்டு மாண­வி­யைப் போல காட்­டிக்­கொண்ட 24 வயது ஷாலினி சவு­கான், உணவக ஊழி­யர்­ முதல் மூத்த மாண­வர்­கள் வரை இனிக்க இனிக்கப் பேசி நண்­பர்­க­ளாக ஆக்­கிக்கொண்­டார்.

ஐந்து மாதங்­க­ளாக கல்­லூரி வளா­கத்­தி­லேயே சுற்றி வந்த அவர் இவ்­வாண்டு ஜூலை­யில் முத­லாம் ஆண்டு எம்­பி­பி­எஸ் மாண­வர்­களை கொடூ­ர­மாக 'ராகிங்' செய்த 11 மூத்த மாண­வர்­களைக் கண்­டு­பித்­துள்­ளார்.

அண்மையில் இந்­தூ­ரில் உள்ள சன்­யோ­கிதாகஞ்ச் காவல் நிலையத் தில் அவர் பணியில் சேர்ந்தார். முதல் வேலையே மாறு ­வே­டத்­தில் செல்ல வேண்­டிய பணி­யாக இருந்­தது.

காவல் அதி­கா­ரி­யாக பணியாற்­றிய அவ­ரது தந்தை பத்து ஆண்டு ­க­ளுக்கு முன்பு கால­மா­னார். அவ­ரைப் போல தானும் காவல் அதி­கா­ரி­யாக வேண்­டும் என்ற கனவில் இவரும் காவல் பணி­யில் சேர்ந்­தார்.

ஜீன்ஸ் பேண்ட், சட்­டை­யும் அணிந்து கையில் புத்­த­க­மும் பையு­மாக மாண­வி­போல சென்ற அவர் பல இடங்­களில் பல மணி நேரம் மாணவர்களைக் கண்காணித்து வந்தார்.

"'ராகிங்' சம்­ப­வத்தை விசா­ரித்து வரும் என்­னு­டைய மூத்த அதி­காரி க­ளான டெஹ­ஸிப் காஸி­யும் சத்­ய­ஜித் சவு­கா­னும் எந்­தெந்த மாணவர்­ க­ளைக் கண்­கா­ணிக்க வேண்­டும் என்று என்­னி­டம் கூறி­யி­ருந்­த­னர். இதற்­காக உண­வ­கத்­தி­லும் இடை­வே­ளை­யி­லும் பல மணி நேரம் அவர்­க­ளைக் கண்­கா­ணித்­தேன். அதே சம­யத்­தில் எல்­லோ­ரி­ட­மும் பேசி, பழகி பழைய சகமாண­வி­யைப்போல காட்­டிக் கொண்­டேன்," என்று ஷாலினி தெரி­வித்­தார்.

கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை ஆபா­ச­மான செயல்­களில் மூத்த மாணவர்கள் வலுக்­கட்­டா­ய­மாக ஈடு­பட வைத்­துள்­ள­னர். மொத்­தம் 11 மாண­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் ஒன்­பது பேர் மத்­தி­ய­பி­ர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள்.

ஒரு­வர் மேற்கு வங்­கா­ளத்­தைச் சேர்ந்­த­வர். மற்­றொ­ரு­வர் பீகா­ரைச் சேர்ந்­த­வர் என்று விசா­ரணை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அனைவருக்கும் காவல் நிலையத்தில் முன்னிலையாக உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.