எல்லையில் இந்திய, சீனப் படைகள் மீண்டும் மோதல்

எல்லையில் இந்திய, சீனப் படைகள் மீண்டும் மோதல்

2 mins read
c7207046-c7d3-42c9-9b8e-c3d7cf125b1e
-

புது­டெல்லி: இந்­திய, சீன எல்­லைப் பகு­தி­யில் இரு தரப்பு வீரர்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட திடீர் மோதல் கார­ண­மாக பதற்­றம் நிலவி வரு­கிறது.

இந்­தத் திடீர் மோத­லின்­போது இரு­த­ரப்­பி­லும் உயி­ரி­ழப்பு ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­றும் சில வீரர்­கள் காய­ம­டைந்­துள்­ள­தா­க­வும் ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கு­மான எல்லைப் பிரச்­சினை பல ஆண்­டு­களாக நீடித்து வரு­கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி கல்­வான் பள்­ளத்­தாக்கு பகு­தி­யில் இரு­த­ரப்பு வீரர்­களும் கடு­மை­யாக மோதிக்­கொண்­ட­னர். இதில் இந்­திய வீரர்­கள் இரு­பது பேரும் எதிர்த்­த­ரப்­பில் நாற்­பது பேரும் பலி­யா­கி­விட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­கின.

இதை­ய­டுத்து பதற்­றத்­தைக் குறைக்­கும் வகை­யில் இரு நாடு­க­ளின் ராணுவ உய­ர­தி­கா­ரி­கள் மட்­டத்­தில் பேச்­சு­வா­ர்த்­தை­கள் நடை­பெற்று வரு­கின்­றன. இதன் எதி­ரொ­லி­யாக இரு நாடு­களும் எல்­லை­யில் குவிக்­கப்­பட்­டி­ருந்த வீரர்­களை திரும்­பப் பெற்­றுள்­ளன.

எனி­னும் ராணுவ நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வச­தி­யாக எல்­லைப் பகு­தி­யில் பல்­வேறு கட்டு­மா­னப் பணி­களை சீன அரசு ரக­சி­ய­மாக மேற்­கொண்டு வரு­வ­தாக இந்­தியா குற்­றம்­சாட்டி வரு­கிறது. மேலும், அவ்­வப்­போது எல்லை ஊடு­ரு­வல் தொடர்­பாக இரு­நாட்டு வீரர்­க­ளும் சிறிய மோதல்­களில் ஈடு­ப­டு­வ­தும் பின்­னர் அமைதி ஏற்­ப­டு­வ­தும் தொடர்­க­தை­யாகி உள்­ளது.

இந்­நி­லை­யில், அரு­ணாச்­சல பிர­தேச மாநில எல்­லை­யில் இந்­திய, சீன வீரர்­கள் மீண்­டும் மோதிக் கொண்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது. கடந்த 9ஆம் தேதி, தவாங் பகு­தி­யில் நிகழ்்ந்த இந்த மோத­லின்­போது இரு தரப்­பி­லும் சில வீரர்­கள் காய­ம­டைந்­துள்­ள­னர்.

சீன ராணு­வத்­தி­னர் எல்­லையில் முன்­ன­றி­விப்பு ஏது­மின்றி, சட்­ட­வி­ரோ­த­மாக வேலி அமைக்க முயன்­ற­து­தான் மோதல் ஏற்­பட முக்­கியக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது. நவம்­பர் 11ஆம் தேதி வரை இந்த மோதல் நீடித்­துள்­ளது.

மேலும், சீன வீரர்­கள் சிலர் எல்­லைக்­கோட்டை கடக்க முயன்­ற­போது, இந்­திய வீரர்­கள் அவர்­க­ளைச் சூழ்ந்­து­கொண்டு தாக்­கு­தல் நடத்­தி­ய­தா­க­வும் கூறப்­படு­கிறது.

நேருக்கு நேர் மோதிக்­கொண்­ட­தால் பதற்­றம் அதி­க­ரித்த நிலை­யில், உய­ர­தி­கா­ரி­கள் உட­ன­டி­யாக மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தையை அடுத்து, அங்கு தற்­கா­லி­க­மாக அமைதி திரும்­பி­யுள்­ளது.

இதற்­கி­டையே, எல்­லை­யில் நிகழ்ந்த மோதல் குறித்து மத்­திய தற்­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் விளக்­கம் அளித்­தார். அப்­போது, தவாங் பகு­தி­யில் சீன வீரர்­கள் அத்­து­மீ­றி­ய­தா­க­வும் இந்­திய வீரர்­கள் தகுந்த பதி­லடி கொடுத்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

"இந்த மோதலில் எந்த வீரரும் உயிரிழக்கவில்லை. பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. சீன வீரர்களின் அத்துமீறல் குறித்து அந்நாட்டு அரசாங்கத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.