கர்நாடகாவில் ஐம்பது நாள்களுக்கு காங்கிரஸ் பாதயாத்திரை

கர்நாடகாவில் ஐம்பது நாள்களுக்கு காங்கிரஸ் பாதயாத்திரை

1 mins read
83905831-4f04-4ba7-ad17-5e33e507a30c
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைத்் தேர்­தல் நெருங்­கு­வ­தை­யடுத்து வெற்­றிக்­கான வியூ­கங்­களை வகுப்­ப­தில் அர­சி­யல் கட்­சி­கள் மும்­மு­ர­மாக உள்­ளன.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் பிரம்­மாண்ட கூட்டு யாத்திரை மேற்­கொள்­ளப்­படும் என அக்­கட்­சி­யின் தேசி­யத் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே அறி­வித்­துள்­ளார்.

இந்த யாத்­திரை மக்­கள் மத்­தி­யில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அது காங்­கி­ர­சின் வெற்­றிக்­குக் கைகொ­டுக்­கும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

கர்­நா­ட­கா­வில் அடுத்த நான்கு மாதங்­க­ளுக்­குள் சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும். அங்கு தற்­போது பாஜக ஆட்சி நடை­பெற்று வரு­கிறது.

ஆட்­சியைத்் தக்க வைத்­துக்­கொள்ள பாஜக பல்­வேறு பிர­சார திட்­டங்­களை வகுத்­துச் செயல்­படுத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில் மல்­லி­கார்­ஜுன கார்கே தலை­மை­யில் டெல்­லி­யில் நடை­பெற்ற ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கர்­நா­டக தேர்­தல் குறித்து விவா­திக்­கப்­பட்­டது.

இதில் அக்­கட்­சி­யின் முக்­கி­யத் தலை­வர்­கள் 15 பேர் கலந்து கொண்­ட­னர்.

அப்­போது, மாநி­லத்­தில் உள்ள 224 தொகு­தி­க­ளி­லும் யாத்­திரை நடத்­து­வது என்­றும் அப்­போது நடப்பு பாஜக ஆட்­சி­யில் நடை­பெற்ற முறை­கே­டு­கள் குறித்து மக்­க­ளி­டம் விவ­ரிப்­பது என்­றும் முடி­வா­னது.

"ஊழல்­கள் நடந்­தி­ருப்­பின், அவை தொடர்­பான ஆதா­ரங்­க­ளைத் திரட்டி மக்­கள் முன் அம்­ப­லப்­ப­டுத்த வேண்­டும். மொத்­தம் ஐம்­பது நாள்­க­ளுக்கு யாத்­திரை நடத்­தப்­பட வேண்­டும்.

"ஜன­வரி முதல் வாரத்­தி­லேயே யாத்­தி­ரை­யைத் தொடங்­கி­னால்­தான் அனைத்­துத் தரப்பு மக்­க­ளை­யும் சென்­ற­டைய முடி­யும். எனவே நிர்­வா­கி­கள் இதில் கவ­னம் செலுத்த வேண்­டும்," என மல்­லி­கார்­ஜுன கார்கே வலி­யு­றுத்தி உள்­ளார்.