டெல்லியில் 450 இலவச மருத்துவப் பரிசோதனைகள்

டெல்லியில் 450 இலவச மருத்துவப் பரிசோதனைகள்

1 mins read
afb15a2f-8e5e-4cc9-ae8c-b6d6e8715b3e
-

புதுடெல்லி: அரசு மருத்­து­வ­மனை­கள், சுகா­தார மையங்­களில் எதிர்­வ­ரும் ஜன­வரி 1ஆம் தேதியில் இருந்து 450 வகை­யான மருத்­துவப் பரி­சோ­த­னை­கள் இல­வ­ச­மாக செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­கெ­னவே அம்­மா­நி­லத்­தில் 212 வகை­யான இல­வச மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள் செய்­யப்­ப­டு­கின்­றன.

கல்­விக்­கும் சுகா­தா­ரத்­துக்­கும் தமது அரசு முன்­னு­ரிமை அளிக்­கும் என்று அறி­வித்­த­தைச் செயல்­ப­டுத்தி வரு­வ­தாக டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் கூறி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து இல­வச மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்ள அவர், எவ­ரு­டைய பொரு­ளா­தார நிலை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், அனை­வ­ருக்­கும் நல்ல தர­மான சுகா­தா­ரம், கல்­வியை வழங்­கு­வ­து­தான் டெல்லி அர­சின் நோக்­கம்," என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

"சுகா­தா­ரம் விலை உயர்ந்­த­தா­கி­விட்­டது. பல­ரால் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று மருத்­து­வம் பார்த்­துக்கொள்ள முடி­யாத அள­வுக்கு கட்­ட­ணங்­கள் அதி­க­ரித்­து­விட்­டன," என முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரிவித்துள்ளார்.