தம்பி இறந்ததாக நாடகமாடி அமெரிக்க விசா பெற முயன்ற இளையர் கைது

தம்பி இறந்ததாக நாடகமாடி அமெரிக்க விசா பெற முயன்ற இளையர் கைது

2 mins read
d8d679ae-8302-49e6-a14d-101c92144ac9
-

புது­டெல்லி: அமெ­ரிக்கா செல்­வ­தற்­கான விசா­வைப் பெறு­வ­தற்­காக, நியூ­யார்க் நக­ரில் வசித்த தனது சகோ­த­ரர் இறந்­து­விட்­ட­தா­கக் கூறி அதற்­கான போலி ஆவ­ணங்­களை அளித்த இளை­யரை டெல்லி காவல்­துறை கைது செய்­துள்­ளது.

ஜஸ்­விந்­தர் சிங் என்ற அந்த 26 வயது இளை­யர் மீது அமெரிக்க தூத­ர­கம் அளித்த புகா­ரின் பேரில் இந்த கைது நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

பஞ்­சாப் மாநி­லம் பாட்­டி­யாலா பகு­தி­யைச் சேர்ந்த ஜஸ்­விந்தருக்கு அமெ­ரிக்­கா­வில் குடி­யேற வேண்டும் என்­பது விருப்­ப­மா­கும். எப்­ப­டி­யா­வது அங்கு சென்­று­விட வேண்­டும் என்று திட்­ட­மிட்டு வந்த அவர், குறுக்கு வழி­களை நாடத் தொடங்­கி­னார்.

இதை­ய­டுத்து ஒரு நாட­கத்தை அரங்­கேற்ற அவர் முடிவு செய்­தார். அதன்­படி, இரட்­டைச் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ரான தாம் பஞ்­சாப் காவல்­து­றை­யில் கடந்த 2017 முதல் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் நியூ யார்க்­கில் வசித்து வந்த தனது சகோ­த­ரர் அண்­மை­யில் இறந்­து­விட்­ட­தா­க­வும் அமெ­ரிக்க தூத­ர­கத்­தில் அளித்த விசா விண்­ணப்­பத்­தில் குறிப்­பிட்­டார் ஜஸ்விந்தர் சிங்.

தமது சகோ­த­ர­ரின் இறு­திச் சடங்­கில் பங்­கேற்க அங்கு செல்ல விரும்­பும் தமக்கு விசா அளிக்க வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்த ஜஸ்­விந்­தர் சிங், நியூ­யார்க்­கில் தனது சகோ­த­ரர் இறந்­தது தொடர்­பான சில ஆவ­ணங்­களை விண்­ணப்­பத்­து­டன் இணைத்­திருந்­தார்.

பஞ்­சாப் காவல்­து­றை­யில் பணி­யாற்­று­வ­தா­கக் குறிப்­பிட்­டால் விரைவில் விசா கிடைத்­து­வி­டும் என்று அவர் எதிர்­பார்த்­தி­ருந்த நிலை­யில் ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

அமெ­ரிக்க தூத­ரக அதி­காரிகள் ஜஸ்­விந்­தர் தாக்­கல் செய்த ஆவ­ணங்­கள் போலி­யா­னவை என்­பதை கண்­டு­பி­டித்­து­விட்­ட­னர்.

மேலும், ஜஸ்விந்தருக்கு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொண்டனர். பின்னர், அவர் மீது காவல்துறையில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்­துக்கு நேர்­கா­ண­லுக்­காக சென்ற ஜஸ்­விந்­தரை அம்மாநில காவல்­துறை கைது செய்­தது.