புதுக்கூட்டணி: ராகுலுடன் இணைந்த ரகுராம் ராஜன்

புதுக்கூட்டணி: ராகுலுடன் இணைந்த ரகுராம் ராஜன்

2 mins read
a60a7838-ceab-4223-b24c-0b637081e6aa
-

'இந்திய பொருளியல் அடுத்த ஆண்டு 5% வளர்ச்சி காண போராட வேண்டியிருக்கும்'

ஜெய்ப்­பூர்: அடுத்த ஆண்டு இந்தி­யா­வின் பொரு­ளி­யல் ஐந்து விழுக்­காடு வளர்ச்­சியை எட்­டிப்­பிடிக்­கப் போராட வேண்­டி­யி­ருக்­கும் எனக் கணித்­துள்­ளார் இந்­திய ரிசர்வ் வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் ரகு­ராம் ராஜன்.

இந்­தி­யா­வின் ஏற்­று­மதி அளவு குறைந்­துள்­ள­தா­க­வும் இது­போன்ற கார­ணி­க­ளால் பொரு­ளி­யல் வளர்ச்சி பாதிக்­கப்­படும் என்­றும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல் காந்­தி­யின் ஒற்­றுமை நடைப்­ப­ய­ணத்­தில் ரகுராம் ராஜ­னும் பங்­கேற்­றது அர­சி­யல் களத்­தில் புதிய விவா­தங்­களை எழுப்பி உள்­ளது. அவ­ரது பங்­கேற்பை காங்­கி­ரஸ் தலை­வர்­கள் வர­வேற்ற நிலை­யில், பாஜ­க­வி­னர் விமர்­சித்­துள்­ள­னர்.

காங்­கி­ரஸ் கட்­சி­யைப் பலப்­ப­டுத்­தும் வித­மாக குமரி முதல் காஷ்­மீர் வரை­யி­லான ஒற்­றுமை நடைப்­பயணத்தை மேற்­கொண்­டுள்­ளார் ராகுல் காந்தி. கடந்த செப்­டம்­பர் 7ஆம் தேதி கன்­னி­யா­கு­ம­ரி­யில் இந்த நடைப்­ப­ய­ணம் தொடங்­கி­யது. தற்­போது ராஜஸ்­தான் மாநி­லத்­தில் நடைப்­ப­ய­ணத்­தைத் தொடர்­கி­றார் ராகுல். ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் ராகுலை பல்­வேறு தரப்­பி­ன­ரும் இந்த நடைப்­ப­ய­ணத்­தின் போது சந்­திக்­கின்­ற­னர். அந்த வகை­யில், ரிசர்வ் வங்கி முன்­னாள் ஆளு­நர் ரகு­ராம் ராஜ­னும் நடைப்­ப­ய­ணத்தில் பங்­கேற்­றார். அப்­போது அவர் ராகுலு­டன் பேசிக்­கொண்டே நடந்­தார்.

"இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் அடுத்த ஆண்டு கடி­ன­மான சூழலை எதிர்­கொள்ள வேண்டி­இ­ருக்­கும். வட்டி விகி­தங்­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில், ஏற்­று­மதி நட­வ­டிக்­கை­கள் மந்தமடைந்­துள்­ளன. எனவே நாட்டின் பொரு­ளி­யல் வளர்ச்சி ஐந்து விழுக்­காடு அளவை எட்டுவது போராட்­டமாக இருக்கும். அனைத்­து­லக அள­வி­லும் பொருளி­யல் வளர்ச்சி பாதிக்­கப்­படும்," என ரகு­ராம் ராஜன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யப் பொரு­ளி­யல் ஐந்து விழுக்­காடு வளர்ச்சி கண்­டால் அதை அதிர்ஷ்­ட­மா­கக் கருத வேண்­டும் என்று குறிப்­பிட்டுள்ள அவர், எந்த அடிப்­ப­டை­யில் பொரு­ளி­யல் வளர்ச்சி கணக்கிடப்­ப­டு­கிறது என்­பது முக்­கி­யம் என்று கூறி­யுள்­ளார்.

கொரோனா நெருக்­க­டிக்கு முன்பே இந்­தி­யா­வின் பொரு­ளி­யல் நிலை மந்­த­ம­டை­யத் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் நாட்­டின் வளர்ச்­சிக்­குத் தேவை­யான சீர்­தி­ருத்­தங்­களை ஏற்­ப­டுத்த தவறி­விட்­ட­தா­க­வும் ரகு­ராம் ராஜன் சுட்­டிக்­காட்டி உள்­ளார். அவ­ரது இக்­க­ருத்­து­க­ளுக்கு பாஜ­க­வி­னர் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

ரகு­ராம் ராஜன் காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் ரிசர்வ் வங்கி ஆளு­ந­ரா­கப் பொறுப்­பில் இருந்­தார். இதைச் சுட்­டிக்­காட்டி உள்ள பாஜ­க­வி­னர், தமக்கு அந்­தப் பதவியை வழங்­கிய குடும்­பத்­துக்கு பட்­டுள்ள நன்­றிக்­க­டனை திருப்­பிச் செலுத்த ரகு­ராம் ராஜன் சில கருத்­து­களை தெரி­வித்­துள்­ள­தாக விமர்­சித்­துள்­ள­னர்.

முன்­னாள் பிர­த­மர் மன்­மோகன் சிங்­கும் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணை­வ­தற்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளு­ந­ரா­கப் பொறுப்பு வகித்­த­வர் என்­றும் பிறகு காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் மத்­திய நிதி­ய­மைச்­ச­ரா­கப் பதவி வகித்­த­வர் என்­றும் பாஜக தேசிய பொதுச்­செ­ய­லா­ளர் சி.டி.ரவி சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

இதற்­கி­டையே, ரகு­ராம் ராஜ­னு­டன் தாம் நடந்து செல்­லும் புகைப்­ப­டத்தை தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார் ராகுல் காந்தி.

அதில், "ஒற்­று­மைக்­கா­க­வும் நாட்­டின் எதிர்­கா­லத்­தைப் பாது­காக்­க­வும் நடந்­தோம்," என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ராகுல் நடைப்­ப­ய­ணத்­தில் ரகு­ராம் ராஜன் இணைந்­தது காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் மத்­தி­யில் உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.