போதைப்பொருள் விற்ற சூடான் ஆடவர் உட்பட நால்வர் கைது

போதைப்பொருள் விற்ற சூடான் ஆடவர் உட்பட நால்வர் கைது

1 mins read
db42becf-189d-4a7f-842a-11323d66b377
-

பெங்களூரு: கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்களைக் குறிவைத்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்த சூடான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வரை அம்மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

நான்கு பேரும் நைஜிரியா, கேரளாவைச் சேர்ந்தவர்களிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி அவற்றை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததை அடுத்து கர்நாடக காவல்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

பிடிபட்டவர்களிடம் இருந்து போதைப்பொருள், ஐந்து விலை உயர்ந்த கைப்பேசிகள், ஒரு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.