மண்ணுக்குப் புழு உரம், மனிதனுக்கு நான்

மண்ணுக்குப் புழு உரம், மனிதனுக்கு நான்

4 mins read
838c887b-3098-462e-85da-e023ef1cb2f0
-

சனிக்கிழமை

ஒரு சாமானியர்

மாடுகளை வளர்த்து, மாட்டுச் சாணத்தில் மண்புழுவை வளர்த்து, உரத்தை உருவாக்கி, ரசாயன உர நச்சுகளைத் தவிர்ப்பதால் நான் ஒரு நச்சுக்கொல்லி என்கிறார் இயற்கை விவசாயி அருணாஜடேசன், 72.

செய்தி &

படங்கள்:

எம். கே. ருஷ்யேந்திரன்

எலும்­பில்­லாத மண்­பு­ழு­கூட பயிர்கள் செழித்து வளர உத­வு­கிறது. சக மனி­தர்­கள் உடல்­ந­லத்­து­டன்­ வாழ நாம் உத­வ முடியாதா என்ன என்­று கேட்கிறார் இயற்கை விவ­சாயி அரு­ண­ாஜ­டே­சன், 72.

இவர், மயி­லா­டு­து­றை அருகே உள்ள உளுத்­து­குப்பை என்ற கிரா­மத்­தைச் சேர்ந்தவர்.

மாடு­களை வளர்த்து, சாண எரி­வாயு தயா­ரித்து, சாணத்தை மண்­பு­ழுக்­க­ளுக்கு உண­வாக்கி இயற்கை உரம் தயா­ரித்து, அதை தனது 13 ஏக்­கர் வய­லில் போட்டு, ரச­ாயன கலப்பு இல்­லாத பல ரக நெல்லை அறு­வடை செய்­கி­றார்.

வேளாண் துறை­யில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற திரு அருணா­வின் இரு புதல்­வி­களும் திரு­ம­ண­மாகி சென்­னை­யில் வசிக்­கி­றார்கள்.

மனைவி வாணி, 65, இயற்கை விவ­சா­யப் பெண்­ம­ணி­யாக தன் கண­வ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்து வரு­கி­றார்.

"நான் 2012 முதல் இயற்கை விவ­சா­யம் செய்து வரு­கி­றேன். வேலை ஆள்கள் பற்­றாக்­குறை கார­ண­மாக நான்கு மாடு­களை விற்­று­விட்­டேன்.

"இப்­போது என்­னி­டம் மூன்று கறவை மாடு­கள் உள்­ளன. பால் விற்­பனை ஒரு­பு­றம் இருக்க, 1987 முதல் அன்றாடம் சேரும் சாணத் தைக் கொண்டு இயற்கை எரி­வாயுவை உரு­வாக்கி அந்த வாயுவையே அடுப்பு எரிக்க, சமை­யலுக்­குப் பயன்­ப­டுத்­து­கி­றோம்.

"சாணத்தை எரி­வாயுத் தொட்டி­யில் கொட்­டி­விட வேண்­டும். தொட்டியில் இருந்து மீத்­தேன் வாயு வெளி­யாகும். அது குழாய் வழி சமையல் அறை அடுப்புக்குப் போகும். வாயு வெளியாக வெளியாக தொட்டி கீழே இறங்கும். அப்போது அதில் இருக்கும் தண்ணீரும் சாண­மு­ம் ஒரு குழாய் வழி­யாக நாலறை தடுப்புத் தொட்டிக்குப் போய் அதில் சேக­ர­மாகி­வி­டும்.

"பிறகு தண்­ணீர் வடிந்து சாணம் மட்­டும் தொட்டி அறைகளில் தங்கும். தொட்டியின் நான்காவது அறையில் வடி­யும் தண்­ணீரை டிராக்டர் மூலம் வய­லுக்குக் கொண்டு சென்று வாய்க்­கால் வழி­யாக பயிருக்­குப் பாய­வி­டு­வேன்.

"கொஞ்­ச­மாக ஈரப்­ப­தம் இருக்கும் சாணத்தை வேறொரு தொட்டி­யில் சேர்த்து, ரூ.500 கொடுத்து ஒரு கிலோ மண்­பு­ழுவை வாங்கி வந்து அந்­தச் சாணத் தொட்டியில் விட்­டு­வி­டு­வேன்.

"மண்­பு­ழுவை எறும்பு, பெருச்­சாளி, மர­நாய் ஆகி­ய­வற்­றிடம் இருந்து பாது­காக்க வேண்­டும்.

"மண்­புழு வள­ரும் சாணத் தொண்­டி­யைச் சுற்­றி­லும் தண்­ணீர் நிற்­கும். அத­னால் எறும்­பு­க­ளால் வர­மு­டி­யாது. அந்­தத் தொட்டி அமைந்­துள்ள கொட்­ட­கை­யைச் சுற்­றி­லும் கம்­பி­வலை அமைத்து இருக்­கி­றேன். இத­னால் பெருச்­சாளி, மர­நா­ய் நுழைய முடி­யாது.

"சாணத்தை மண்­பு­ழுக்­கள் சாப்பி­டும். புழுக்­கள் இனப்­பெ­ருக்கம் செய்­யும். கடை­சி­யில் சாணத்தைப் புழுக்கள் உர­மாக மாற்றி­வி­டும். புழு எச்சமே உரமாகும். அதைச் சலித்து புழு வேறு உரம் வேறு என பிரித்து­விடு­வோம்.

"ஆண்டு ஒன்­றுக்கு சுமார் 20 டன் மண்­புழு உரம் தயாரிக்­கி­றேன். யாரா­வது கேட்டால் ஒரு கிலோ மண்­புழு உரம் ரூ.12க்கு விற்­பேன்.

உரத்தை டிராக்­டர் மூலம் வயலில் கொண்டு போய்ச் சேர்த்து ஏக் கருக்கு ஒரு ரக நெல் என்று எனது 13 ஏக்­கர் நிலத்தில் குறுவை, சம்பா என இரு போகத்தில் வெவ்வேறு ரக நெல்லை பயிர் செய்வேன்.

"கறுங்குறுவை, கறுப்பு, சிவப்புக் கவுனி, மைசூர் மல்லி, சீரக சம்பா, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி, நாட்டுப் பாசுமதி, கிச்சடி சம்பா, உள்ளிட்ட பல ரக நெல்லை விளைவிக்கிறேன். விதை நெல்லை யும் விற்கிறேன். வாங்குகிறேன்.

"அறு­வ­டைக்கு இயந்­தி­ரங்­களைப் பயன்­ப­டுத்­த­மாட்­டேன். என்னி­டம் வேலை பார்க்­கும் அத்­தனை பேரும் பெண்­கள்­தான்.

"ஏக்­க­ருக்கு சராசரியாக 2,000 கிலோ நெல் விளைவிக்கிறேன்.

நெல்லை முறைப்­படி பக்குவப் படுத்தி அவித்து, காயவைத்து அரைத்து பச்சை, புழுங்­கல் அரிசியை சில்­லறையில் விற்­று­ வரு­கி­றேன். உளுந்து, பயறும் விளை­விக்­கிறேன். அவல், கூழ் வடவம் தயாரித்து விற்கிறேன்.

"பொது­வாக ரசா­ய­னம் இல்­லாத அரிசி விலை அதி­க­மா­கத்­தான் இருக்­கும். ஆகக் குறைந்த சிஆர் ரக புழுங்கல் இட்லி அரிசி கிலோ ரூ.50க்கு கொடுக்­கி­றேன். உயர்ந்த ரக கறுப்புக் கவுனி அரி­சியை ரூ.160க்கு விற்­கி­றேன்.

"இயற்கை உர வேளாண்மையில் எனக்கு லாப­ம் இல்லை. நட்டம் உண்டு. தமிழகத்தில் 2,500 இயற்கை விவ­சா­யி­கள் உள்ளனர். ஆனால், நான் உட்­பட 500 பேர்­தான் தீவி­ர­மாக ஈடுபடு­கி­றோம்.

"நாங்­கள் 'வள­நாடு தற்சார்பு வேளாண் முன்­னேற்ற நிறு­வ­னம்' என்ற ஓர் அமைப்பை ஏற்­படுத்தி பரஸ்­ப­ரம் உத­விக்­கொள்­கி­றோம்.

"வேளாண் படிப்பு மாணவர் களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அழைப்பார்கள். என் வீட்டுக்கு வந்து மாணவ, மாணவி கள் இயற்கை விவசாயம் பற்றி நேரடியாக தெரிந்துகொள்வார்கள்.

அரசாங்கத்திடம் இருந்து அங்கீ கார, பாராட்டுச் சான்றிதழ் வாங்கி இருக்கிறேன்.

"மக்­கள் இப்­போது கொஞ்­சம் கொஞ்­ச­மாக மாறு­கி­றார்­கள். உடல்­ந­லத்­துக்கு ஏற்ற வாழ்க்­கைப்­பாணி முக்­கி­யம் என்­பதையும் இதற்கு இயற்கை விவ­சாய அரிசி தவிர்க்க முடி­யாத ஒன்று என்­பதை­யும் இப்­போது அவர்கள் உணர்­கிறார்­கள். ஆகையால் ரசாயனக் கலப்பு இல்லாமல் இயற்கை விவ­சாயம் மூலம் விளை­யும் அரிசி மீது அவர்­க­ளுக்கு நாட்­டம் அதி­க­மாகி வரு­கிறது.

"இதுவே நான் படும் பாட்­டுக்கு பலன் என்­பதை நினைத்து மன­நிறைவு அடை­கி­றேன்" என்று திரு அருணா கூறி­னார்.

குறிப்புச் சொற்கள்