பலமுறை கேட்டும் மாநிலத் தகுதி கிடைக்கவில்லை

பலமுறை கேட்டும் மாநிலத் தகுதி கிடைக்கவில்லை

2 mins read
4f79e336-aea2-4559-a794-b410d5c9a590
-

புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி வேதனை

புதுச்­சேரி: புதுச்­சே­ரிக்கு மாநி­லத் தகுதி வழங்க வேண்­டும் என்பது மாநி­லத்­தின் அனைத்துக் கட்­சி­க­ளின் கோரிக்­கை­யா­கும். இந்த சூழ­லில் ஆளும் கட்­சி­யாக என்.ஆர்.காங்­கி­ரஸ் கட்­சிக்கு ஆத­ரவு அளிக்­கும் சுயேட்சை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நேரு தலை­மை­யில் 60 அமைப்­பு­கள் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டன.

அப்­போது, முதல்­வர் ரங்­க­சாமி, "மாநி­லத் தகுதி கோரிக்­கையை வலி­யு­றுத்த சிறப்­புச் சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தைக் கூட்­டு­வ­து­டன், அனைத்து கட்சி கூட்­டத்­தை­யும் நடத்த வேண்­டும். சட்­ட­ரீ­தி­யாக செய்­ய­வேண்­டி­ய­தைச் செய்­வோம்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

இந்த அமைப்­பு­கள் கையெ­ழுத்­திட்ட கோரிக்கை மனுவை சட்ட பேர­வை­யில் முத­ல­மைச்­ச­ரி­டம் அந்த அமைப்­பி­னர் அளித்­த­னர். அதை பெற்­றுக்­கொண்ட முத­ல­மைச்­சர் என்.ரங்­க­சாமி மாநி­லத் தகுதி இல்­லா­த­தால் பல மேம்­பா­டு­க­ளைச் செய்ய முடி­யாத நிலை­யில் நாம் உள்­ளோம் என்­றார். நிர்­வா­கத்­தில் இருக்­கும் எங்­க­ளுக்­குத்­தான் சிர­மங்­களும் வேத­னை­யும் தெரி­யும். இத­னால், அதி­க­மான மன­உ­ளைச்­சல் தான் ஏற்­ப­டு­கிறது என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

பல­முறை கேட்­டும் மத்­திய அரசு செவி­சாய்க்­க­வில்லை என்று என்.ரங்­க­சாமி தனது வேதனையைத் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது புதுச்­சே­ரி­யில் என்.ஆர்.காங்­கி­ரஸ் மற்­றும் பார­திய ஜனதா கட்சி கூட்­டணி ஆட்சி நடை­பெ­று­கிறது.

முந்­தைய காங்­கி­ரஸ் ஆட்­சி­யில் துணை நிலை ஆளு­நர் கிரண்­பேடி பல்­வேறு நெருக்­க­டி­க­ளைத் தந்­த­­தாக அப்­போ­தைய முத­ல­மைச்­சர் நாரா­ய­ண­சாமி குற்­றச்­சாட்­டு­களை வைத்­தார்.

இப்­போது முதல்­வர் ரங்­க­சாமி தனி மாநி­லத் தகுதி குறித்து குரலை உயர்த்­தி­யுள்­ளார். இந்­நி­லை­யில் இது­கு­றித்­துப் பேசிய திமுக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் "இது வெறும் நாட­கம்" என்­றும் மாநி­லத் தகுதி கிடைப்­ப­தற்கு முதல்­வர் ரங்­க­சாமி எவ்­வித முயற்­சி­யி­லும் ஈடு­ப­ட­வில்லை என்­றும் குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.