'இது நேருவின் இந்தியா அல்ல' ராகுலின் கருத்துக்குப் பதிலடி

'இது நேருவின் இந்தியா அல்ல' ராகுலின் கருத்துக்குப் பதிலடி

2 mins read
2199e6a1-ab0e-46b0-a4c8-40614f71e8b5
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல்­காந்தி 'இந்­திய ஒற்­றுமை நடைப்­ப­ய­ணம்' என்ற பெய­ரில் இந்­திய நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்டு வரு­கி­றார். கன்­னி­யா­கு­ம­ரி­யில் தொடங்கி கேரளா, கர்­நா­டகா, தெலுங்­கானா உட்­பட பல மாநி­லங்­கள் வழி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட இந்­தப் பய­ணம் இப்­போது ராஜஸ்­தான் மாநி­லத்­தில் நடை­பெற்று வரு­கிறது.

நடைப்­ப­ய­ணம் நேற்று முன்­தினம் நூறா­வது நாளை எட்­டி­யது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னார். அப்­போது, அரு­ணாச்­ச­ல­பி­ர­தேச எல்­லை­யில் இந்­திய-சீன படை­கள் மோதிக்­கொண்­டது தொடர்­பா­கக் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த ராகுல்­காந்தி, சீனா முழு­மை­யான போருக்கு தயா­ரா­கு­வ­தா­க­வும், இந்­திய அரசு தூங்­கிக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.

மேலும், இரண்­டா­யி­ரம் சதுர கிலோ­மீட்­டர் இந்­திய நிலப்­ப­ரப்பை சீனா கைப்­பற்­றி­விட்­ட­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

சீனா­வு­ட­னான போர் குறித்த ராகுல்­காந்­தி­யின் கருத்­துக்கு பாஜக செய்­தித்­தொ­டர்­பா­ளர் ராஜ்­ய­வர்­தன் சிங் ரத்­தோர் கூறு­கை­யில், "இந்­திய பாது­காப்பு மற்­றும் எல்­லைப் பகுதி குறித்து நாட்­டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லும் ராணுவ வீரர்­க­ளின் துணி­வைக் குறைத்து மதிப்­பி­டும் வகை­யி­லும் ராகுல்­காந்தி கருத்து தெரி­வித்­துள்­ளார்.

ராகுல்­காந்­தி­யின் கொள்­ளுத்­தாத்தா நேரு­வின் இந்­தியா இது­வல்ல. (1962 இந்­தியா - சீனா மோதலை மேற்­கோள்­காட்டி) தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது 37,242 ஆயி­ரம் சதுர கிலோ­மீட்­டர் நிலப்­பரப்பை இழந்­தது யார் எனக் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

ராகுல்­காந்தி தேசிய பாது­காப்பு குறித்து பொறுப்­பற்ற கருத்­து­க­ளைத் தெரி­விக்க வேண்­டாம்.

நேற்று நடை­பெற்ற பய­ணத்­தின்­போது ஆயி­ரக்­க­ணக்­கான தொண்­டர்­கள் ராகுல் காந்­தி­யு­டன் உற்­சா­க­மாக கலந்­து­கொண்­ட­னர். அவ­ரு­டன், இமாச்­சல பிர­தேச முதல்­வர் சுக்­விந்­தர் சிங் சுக்­கு­வும் நடைப்பயணத்தில் கலந்­து­கொண்­டார்.