பாலியல் குற்றவாளிகள் விடுவிப்பு: பில்கிஸ்பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி

பாலியல் குற்றவாளிகள் விடுவிப்பு: பில்கிஸ்பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி

1 mins read
22452ba6-58c8-49af-94b0-485230f24773
-

புதுடெல்லி: குஜ­ராத்­ மாநிலத்தில் 27.2.2002ல் நடந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறையும் மதக்கலவரமும் ஏற்பட்டது.

அந்த வன்முறையில் கர்ப்­பி­ணிப் பெண்­ணான பில்­கிஸ் பானு கூட்­டுப் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்­ட­தோடு, அவ­ரின் 3 வயது குழந்தையும் 14 உற­வி­னர்­களும் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர். இது­கு­றித்து சிபிஐ விசா­ரணை நடத்­தி­யது. இதில் 11 பேருக்கு 2008ஆம் ஆண்டு சிறப்பு நீதி­மன்­றம் ஆயுள் தண்­டனை வழங்கி உத்­த­ர­விட்­டது. பின்­னர், குற்­ற­வா­ளி­கள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறை தண்­டனை முடி­யும் முன்பே விடு­விக்­கப்­பட்­ட­னர்.

1992ஆம் ஆண்டு குஜ­ராத் அரசு கொண்டு வந்த சட்­டத்­தின் படி 14 ஆண்­டு­கள் சிறை­யில் தண்­டனை அனு­ப­வித்த குற்­ற­வா­ளி­களை நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் முன்­கூட்­டியே விடு­தலை செய்ய மாநில அரசு முடி­வெ­டுக்­க­லாம் என்று வழங்­கிய தீர்ப்பை எதிர்த்து பில்­கிஸ் பானு சீராய்வு மனு தாக்­கல் செய்­தார்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யில் இருந்து நீதி­பதி பெலா திரி­வேதி வில­கி­விட்­டார்.

இதை­ய­டுத்து, நீதி­ப­தி­கள் அஜய் ரஸ்­தோகி, விக்­ரம் நாத் ஆகி­யோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது. அப்­போது, இந்த மனுவை அவர்­கள் தள்­ளு­படி செய்­த­னர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி 11 பேரை­யும் சிறை­யில் இருந்து விடு­தலை செய்­தது குஜராத் அரசு. நன்­ன­டத்தை கார­ண­மாக மத்­திய அர­சின் ஒப்­பு­த­லு­டன் அவர்­களை விடு­தலை செய்­ததாக அப்போது குஜ­ராத் மாநில அரசு தெரி­வித்­துள்­ளது.