குஜராத்தில் கடந்த 2002ல் கோத்ரா ரயில் நிலையத்தில், இருந்த ரயிலுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் சிக்கி 59 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பலர் சிறையில் உள்ளனர். இவர்களில் ஒருவர் பரூக் அப்துல் சத்தார் இப்ராகிம் காஜி. சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு தீ வைத்தபின், அதில் இருந்தவர்கள் தப்பிவிடாதபடி கல் எறிய தூண்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னை பிணையில் விடக்கோரி இவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 17 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்ததற்காக, பரூக்குக்கு நேற்று பிணை வழங்கியது.

