சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூசைக்காக கடந்த 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது.
தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மண்டல பூசை இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
சபரிமலையில் நேற்று மட்டும் 90,827 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக ஆலய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சபரிமலையில் 18ஆம் படி வழியாக ஒரு நிமிடத்துக்கு 80 பக்தர்கள் வீதம் ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் வரை மேலே சென்று சாமி தரிசனம் செய்ய ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

