இந்தியாவில் ஆடவர் ஒருவர் தனது உறவினரை கொலை செய்து பின்னர் அவரை பத்து துண்டுகளாக வெட்டியுள்ளார். உடல் பாகங்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அனுஜ் சர்மா,32, தனது 64 வயது உறவினர் சரோஜ் என்பவருடன் வசித்து வந்தார். டெல்லியில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல அவர் உறவினரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் சரோஜ் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இருவரிடையே வாக்குவாதம் மூண்டது. கோபமடைந்த அனுஜ் சரோஜ்ஜை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அவரது உடலை பத்து துண்டுகளாக வெட்டியுள்ளார்.
உடல் பாகங்களை வாளி ஒன்றில் போட்டு அவற்றை நெடுஞ்சாலை அருகே உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசியுள்ளார்.
தனது குற்றத்தை மறைக்க சரோஜ் காணவில்லை என்றும் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார் அனுஜ். அவரை விசாரித்ததில் அவருடைய வாக்குமூலங்கள் முரண்பாடாக இருந்ததை காவல்துறையினர் உணர்ந்தனர்.
கொலை, ஆதாரங்களை அழித்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அனுஜ்க்கு எதிராக பதிவுசெய்யப்பட்டுள்ளன.


