இமயமலையைக் காணும் ஆசையை நிறைவேற்றிய மூத்த தம்பதியர்

இமயமலையைக் காணும் ஆசையை நிறைவேற்றிய மூத்த தம்பதியர்

1 mins read
938f1227-ca50-4c74-9515-ec83d0b9a4eb
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவைச் சேர்ந்த மூத்த தம்பதி ஒன்று பல ஆண்டு காலமாக இமயமலையை நேரில் சென்று பார்க்க ஆசைபட்டுவந்தனர். அவர்களின் கனவு அண்மையில் நனவானது. பயணத்தின்போது அவர்கள் எடுத்த காணொளி சமூகத் தளங்களில் பரவலாக பகிர்ந்துகொள்ளப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஆன்டி தாப்பா என்பவர் காணொளி ஒன்றை பகிர்ந்துகொண்டார். இதில் மூத்த தம்பதியர் மலை பிரமிக்கும் மலை பிரேதசம் ஒன்றின் அடிவாரத்தில் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பின்னால் ஹெலிகாப்டர் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இருவரும் தொலைவில் உள்ள மலை ஒன்றை வியந்து பார்க்கின்றனர். அவர்கள் ஆழ்ந்து ரசிப்பது உலகின் ஆக உயரமான இமயமலையாகும்.

தம்பதியர் சுமார் 17,000 அடி உயரத்தில் இருந்ததால் சுவாசிக்க சற்று சிரமப்பட்டனர். இருப்பினும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கூறியவாறு மலைகளை ரசித்தனர்.

86 வயதான அந்த முதியவருக்கு இமயமலையை நேரில் சென்று பார்ப்பது வாழ்நாள் கனவாக இருந்தது. இறுதியில் தமது மனைவியுடன் சென்று அவர் தனது கனவை நிறைவேற்றினார்.

இந்தக் காணொளி இதுவரை 300,000 தடவை பார்க்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட பலரும் தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டதோடு, தங்கள் கனவையும் நிறைவேற்ற முயற்சி எடுக்கப் போவதாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர்.

View post on Instagram