குளிரால் வாடிய கியவ் நகரில் அடிப்படை வசதிகள் திரும்பின

குளிரால் வாடிய கியவ் நகரில் அடிப்படை வசதிகள் திரும்பின

1 mins read
a16794e0-2258-4887-a833-ac7a644de256
-

கியவ்: உக்­ரேன் தலை­ந­கர் கிய­வில் உள்ள குடி­நீர், மின்­சார ஆலை­கள் மீது ரஷ்­யப் படை­கள் நடத்­திய ஆக அண்­மைய தாக்­கு­த­லுக்­குப் பிறகு அங்கு மீண்­டும் அடிப்­படை வச­தி­கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளன.

கடுங்­கு­ளி­ரும் பனி­மூட்­ட­மும் நில­வும் கிய­வில் வெப்­ப­மூட்­டும் வச­தி­கள் மீண்­டும் செயல்­ப­டு­வ­தாக அதன் மேயர் விட்­டாலி கிலிட்ச்கோ நேற்று கூறி­னார்.

ரயில் சேவை­கள், குடி­நீர் இணைப்பு போன்­றவை செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

ரஷ்யா, கடந்த வெள்­ளிக்­கி­ழமை கியவ் மீது 70க்கும் மேற்­பட்ட ஏவு­கணை­க­ளைப் பாய்ச்­சி­யது. கடந்த பிப்­ர­வரி 24ஆம் தேதி போர் தொடங்­கி­ய­தி­லி­ருந்து ரஷ்யா நடத்­தி­யுள்ள மிகப் பெரும் தாக்­கு­தல்­களில் அது­வும் ஒன்று.

அத்­தாக்­கு­தல்­களில் உக்­ரேன் முழுவதும் மின்­சார, தண்­ணீர் வசதிகள் துண்­டிக்­கப்­பட்­டன.