லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தமது கட்சி ஆட்சி புரியும் இரண்டு மாநிலங்களின் சட்டசபைகளை அடுத்த வாரம் கலைக்கும் என்று அறிவித்திருக்கிறார்.
வரும் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி பஞ்சாப், கைபர்-பக்துன்குவா மாநிலச் சட்டசபைகள் கலைக்கப்படும் என்று திரு இம்ரான் சனிக்கிழமை இரவு அறிவித்தார். அவரது பாகிஸ்தான் தெஹரீக்-இ-இன்சாஃப் கட்சி, பாகிஸ்தானின் நான்கு மாநிலங்களில் இரண்டை ஆள்கிறது.
பொதுத் தேர்தலை விரைவில் நடத்தும்படி மத்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க அந்த சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்படுகின்றன.
"சுதந்திரமான, நியாயமானப் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் நாடு மூழ்கும்," என்று திரு இம்ரான் எச்சரித்தார்.

