புதுடெல்லி: இந்தியாவில் ஒரே பாலினத் திருமணங்களை அங்கீகரிக்குமாறு நான்கு ஓரினச்சேர்க்கை தம்பதியர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
ஒரே பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்கறிஞர் நுபுர் குமார் மூலமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "இருவேறு பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உள்ள அனைத்து உரிமைகளும் ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்வதற்கும் உள்ளது. ஒரே பாலினத்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதை ஏற்க மறுப்பது அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது" என கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வேறு சிலர் டெல்லி, கேரள உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்திருந்த வழக்குகளும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இம்மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

