21 ஆண்டுகளுக்குப் பிறகு 'மிஸஸ் வேர்ல்ட்' இந்திய அழகி

21 ஆண்டுகளுக்குப் பிறகு 'மிஸஸ் வேர்ல்ட்' இந்திய அழகி

2 mins read
92ab5790-a9c0-42bf-8e30-44e80d1d6a91
-

புது­டெல்லி: அமெ­ரிக்­கா­வில் நடந்த 'திரு­மதி உலக அழகி' போட்­டி­யில் இந்­தி­யா­வைச் சேர்ந்த சர்­கம் கௌஷல், 31, பட்­டம் வென்­றுள்­ளார்.

திரு­ம­ண­மான பெண்­க­ளுக்­கான உலக அழ­கிப் போட்டி ஆண்டு தோறும் நடத்­தப்­ப­டு­கிறது.

அவ்­வ­கை­யில், இவ்­வாண்­டுக்­கான போட்­டி­யில் 'மிஸஸ் வேர்ல்ட்' பட்­டத்தை வென்று, 21 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இந்­தி­யா­வுக்கு மீண்­டும் கிரீ­டத்தை தட்டி வந்­துள்­ளார் சர்­கம் கௌஷல்.

இவ்­வாண்­டுக்­கான திரு­மதி உலக அழ­கிப் போட்டி அமெ­ரிக்கா வின் லாஸ் வேகாஸ் நக­ரில் நேற்று முன்­தி­னம் நடந்­தது. 63 நாடு­க­ளைச் சேர்ந்த அழ­கி­­களில் ஜம்மு- காஷ்­மீ­ரைச் சேர்ந்த சர்­கம் கௌஷல் இந்­தியா சார்­பில் பட்­டம் வென்­றுள் ளார்.

கடந்த 2021ஆம் ஆண்­டுக்­கான அழ­கிப் பட்­டத்தை வென்ற அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஷைலின் ஃபோர்டு, சர்­கம் கௌஷ­லுக்கு அழ­கிப் பட்­டத்­துக்­கான கிரீ­டத்தை அணி­வித்தபோது, ஆனந்­தக் கண்­ணீர் உகுத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வு­களின்­படி, திரு­2மதி கௌஷல் ஆங்­கில இலக்­கி­யத்­தில் முது­க­லைப் பட்­டம் பெற்­றுள்­ளார். இவர் முன்பு விசா­கப்­பட்­டி­னத்­தில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரிந்­துள்­ளார். தனது கண­வர் கடற்­ப­டை­யில் பணி­பு­ரி­வ­தா­க­வும் இவர் பகிர்ந்­துள்­ளார்.

முடி­சூட்­டப்­பட்ட பின்­னர் இவர் கூறு­கை­யில், "21-22 ஆண்டுகளுக்­குப் பிறகு மீண்­டும் கிரீ­டம் கிடைத்­துள்­ளது. நான் மிக­வும் உற்­சா­க­மாக உள்­ளேன். 'லவ் யூ இந்­தியா, லவ் யூ வேர்ல்ட்," என்று கூறி­னார்.

மத்திய, தெற்கு பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பாலினீசியாவைச் சேர்ந்த அழகி இரண்டாம் இடத்திலும் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அழகி மூன்றாம் இடத்திலும் வெற்றிவாகை சூடினர்.