'பலியான 82 பேரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு தரவேண்டும்'

1 mins read
8e99f7f4-363e-408b-96c4-5465e8efd0da
-

பாட்னா: பீகா­ரில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்கு இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வேண்­டும் என பாஜக எம்.பி. சுஷில் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார்.

பீகா­ரின் மது­வி­லக்கு, கலால் சட்­டப்­பி­ரிவு 42ன்கீழ், கள்­ளச் சாரா­யம் குடித்து இறந்­து­போ­னால் ரூ.4 லட்­ச­மும் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டால் ரூ.2 லட்­ச­மும் இழப்­பீ­டாக வழங்­கப்­பட வேண்­டும் என சட்­டம் கூறு­கிறது.

அதன்­படி, இழப்­பீடு வழங்­கா­வி­டில் மக்­க­ளுக்­காக பாஜக எந்த எல்­லைக்­கும் செல்­லும் என சுஷில் மோடி எச்­ச­ரித்­துள்­ளார்.

பீகார் மாநி­லம், சரண் மாவட் டத்­தில் உள்ள சாப்­ரா­வில் கடந்த நான்கு நாள்­க­ளுக்கு முன்பு கள்­ளச்­சா­ரா­யம் குடித்த 31 பேர் மர­ணம் அடைந்­த­னர். அங்­குள்ள மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்­த­வர்­க­ளு­டன் சேர்த்து இது­வரை 82 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக நிதீஷ் குமார் உள்ளார். இம்மாநிலத்தில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கள்ளச்சாராய விற்பனை கூடி, உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அம்­மா­நி­லத்­தில் நடை­பெற்று வரும் சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­டரில், "கள்­ளச்­சா­ரா­யம் குடித்து உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு அரசு நிதி உதவி அளிக்­காது," என முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ­எதிர்க்­கட்­சி­யான பாஜக அவை­யில் பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி மாநில அர­சுக்கு நெருக்­கடி கொடுத்து வரு­வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.