செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
1d7c6706-648c-4c2f-9522-35c75f81ee35
-

காவல் ஆய்வாளராக தாய்-மகள் போட்டி

திருப்பதி: தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த தாய் நாகமணியும், 37, மகள் திரிலோகினியும், 21, காவல் ஆய்வாளர் பணியைப் பெறுவதற்காக தேர்வு எழுத தயாராகி வருகின்றனர். இருவரும், உடல் தகுதிக்குத் தேர்வாகி, நீளம் தாண்டுதல், 800 மீ. ஓட்டப் பந்தயத்தில் வெற்றிபெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

இதுகுறித்து நாகமணி கூறும்போது, "மகளுடன் போட்டி போடும் நிலை வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. மகளுக்கு காவல் சீருடையை அணிவித்து பணியாற்றச் செய்யவேண்டும் என்பதே என் நீண்டநாள் கனவு. அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் உள்ளது," என்றார். ஏற்கெனவே, நாகமணி காவலராகப் பணியாற்றி வரும் நிலையில், திரிலோகினி காவலர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சபரிமலை தொழுவத்தில் 15 பசுக்கள்

சபரிமலை: ஐயப்பனுக்கு பாலபிஷேகம் செய்வதற்காக சபரிமலை தொழுவத்தில் 15 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு காவலர் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

சபரிமலைக்குத் தினமும் பால் கொண்டு வருவது சிரமம் என்பதால், கோயிலுக்குப் பின்புறம் உள்ள தொழுவத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பங்ளாதேஷை சேர்ந்த ஆனந்த் சாமந்தா என்பவர் பசுக்களைப் பராமரித்து வருகிறார். இப்பசுக்களுடன் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டுவந்து விட்டுச் சென்ற ஆறு ஆடுகள், 25 கோழிகளும் இவரது பராமரிப்பில் இருந்து வருகின்றன.