புதுடெல்லி: நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் நூறாயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும், அனைத்து வகையான விவசாய உற்பத்திப் பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
டெல்லி ராம் லீலா திடலில் தொடங்கிய போராட்டத்தில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.
"நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 18,000 தெருமுனைக் கூட்டங்களை நடத்தினோம். 20 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நடைப்பயணம் மேற்கொண்டோம்.
"இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் காரணமாக விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
"அதனால்தான் டெல்லி போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். போராட்டம் நீடிக்கும்," என விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

