வடஇந்தியாவை வாட்டும் கடுங்குளிர்

வடஇந்தியாவை வாட்டும் கடுங்குளிர்

2 mins read
0ab2b26d-8b91-4444-963f-d5835b6d4131
-

பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த வாகன விபத்துகளில் ஐவர் பலி

புது­டெல்லி: கடந்த சில நாள்­களாக வடஇந்­திய மாநி­லங்­களில் கடுங் குளி­ரும் பனிப்­பொ­ழி­வும் நிலவி வரு­கிறது. இத­னால் பொதுமக்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக வடஇந்திய ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

டெல்லி, பஞ்­சாப், ஹரி­யானா, உத்­த­ரப் ­பி­ர­தே­சம், உத்­த­ரா­கண்ட், சண்­டி­கர் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் கடந்த ஒரு வார­மாக நீடித்து வரும் கடும் பனிப்­பொ­ழிவை தாங்க முடி­யா­மல் பொதுமக்­கள் தவித்து வரு­வ­தாக ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

தின­மும் அதி­காலை தொடங்கி சுமார் நண்­ப­கல் 12 மணி வரை பனி­மூட்­டம் நில­வு­கிறது என்­றும் இதன் கார­ண­மாக வாக­ன­மோட்­டிகள் சிர­மத்­துக்கு ஆளா­கி உள்­ள­னர் என்றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

எதிரே வாக­னங்­கள் வரு­வது தெரி­ய­வில்லை என்­றும் இத­னால் வாக­னத்­தில் செல்ல அச்­ச­மாக உள்­ளது என்­றும் வட­இந்­திய மக்கள் கூறு­கின்­ற­னர். இத­னால் பலர் வெளியே செல்­லா­மல் வீடு­களில் முடங்கி உள்­ள­னர்.

வெவ்­வேறு வாகன விபத்துகளில் சிக்கி டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சத்தில் ஐந்து பேர் பலி­யா­கி­விட்­ட­னர். 33 பேர் காயம் அடைந்து மருத்து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

டெல்லி அருகே உள்ள தன்­கார் பகு­தி­யில் பனிப்­பொ­ழிவு காரணமாக நேற்று அதி­காலை ஏற்­பட்ட விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். அறு­பது பேரை ஏற்றிக்­கொண்டு சென்ற பேருந்­தும் லாரி­யும் மோதிக்கொண்ட அந்த விபத்­தில் பலர் காய­ம­டைந்­த­னர்.

மேலும் சில நாள்­க­ளுக்கு இந்தப் பனிப்­பொ­ழி­வும் கடுங்­கு­ளி­ரும் நீடிக்கும் என டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்ள நிலை­யில், அடர்­பனி நீடிக்­கும்­போது சாலைப் பய­ணங்­களைத் தவிர்க்­கு­மாறு டெல்லி அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

இந்­நி­லை­யில், டெல்லி, பஞ்­சாப், ஹரி­யானா, சண்­டி­கர், உத்­த­ரப்­ பிர­தே­சம் உள்­ளிட்ட பகு­தி­களில் காற்று மாசும் அதி­க­ரித்­துள்­ளது.

நவம்­பர், டிசம்­பர், ஜன­வரி மாதங்­களில் வட­இந்­தி­யா­வில் கடுங்­கு­ளிர் நில­வு­வது வாடிக்கை. சில சமயங்­களில் குளி­ரின் அளவு மிக மோச­மாக மாறும்­போது உயி­ரி­ழப்பு­கள் அதி­க­ரிக்­கும்.

இதை­ய­டுத்து வட­இந்­தி­யாவில் வீடு­கள் இன்றி சாலையில் வசிப்­போருக்­காக தற்­கா­லிக தங்கும்­இ­டங்­கள் தயா­ரா­கின்­றன.

இரவு நேரங்­களில் இங்கு தங்கு­வோர் எண்­ணிக்கை வரும் நாள்­களில் அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. எதிர்வரும் நாள்களில் வட மாநிலங்களில் குளிர் மேலும் அதிகரிக்கக்கூடும்.