ஜெய்ப்பூர்: பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படு வதை பாஜக தலைவர்கள் விரும்புவதில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நடைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிற நாட்டவர் களுடன் பேச இந்தி மொழி பயன்படாது என்றும் ஆங்கிலம்தான் கைகொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
"ஆங்கிலத்தை எதிர்க்கும் பாஜக தலைவர் களின் குழந்தைகள் அனைவரும் ஆங்கில வழியில்தான் படித்து வருகிறார்கள். ஏழை விவசாயிகள், தொழிலாளர் கள் ஆகியோரின் குழந்தைகள் ஆங்கிலம் கற்கக்கூடாது என்பதுதான் பாஜக தலைவர்களின் விருப்பம்," என்று ராகுல் காந்தி சாடினார்.
ஏழை மாணவர்கள் பெரிய கனவு காணக் கூடாது, பரம்பரைத் தொழிலில் இருந்து வெளியேறிவிடக் கூடாது என்பதுதான் பாஜகவினரின் எண்ணம் என்றும் ஏழை மாணவர்கள் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.
பிற நாட்டவர்களோடு பேச இந்தி பயன்படாது, ஆங்கிலம்தான் பயன்படும் என்று குறிப்பிட்ட அவர், ஏழைகளின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
"அமெரிக்கர்களோடு போட்டியிட்டு வெற்றி கொள்ள வேண்டுமெனில் அவர்களின் மொழியில் பேச நமது குழந்தைகளுக் குத் தெரிந்திருக்க வேண் டும்," என்றார் ராகுல்.

