இந்தியப் பொருளியல் 6% வளரும்: ஆய்வு

இந்தியப் பொருளியல் 6% வளரும்: ஆய்வு

2 mins read
88790e08-fab8-4e5c-bb48-cb4adae3935f
-

மும்பை: உல­கின் ஐந்­தா­வது பெரிய பொரு­ளி­யல் நாடான இந்­தியா 2024 மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வு­றும் நிதி ஆண்­டில் 6 விழுக்­காடு வளர்ச்சி காணும் என இந்­திய மத்­திய வங்கி நடத்­திய ஆய்­வில் தெரிய வந்து உள்­ளது. இருப்­பி­னும் நடப்பு நிதி ஆண்­டில் முன்­னு­ரைக்­கப்­பட்ட 6.8 விழுக்­காட்­டைக் காட்­டி­லும் இது குறை­வான வளர்ச்சி என கணிக்­கப்­பட்டு உள்­ளது.

இதர நாடு­க­ளி­லும் இதே­போல வளர்ச்சி குன்றி இருக்­கும் என தக­வல்­கள் உணர்த்­து­கின்­றன. குறிப்­பாக, அமெ­ரிக்கா, ஐரோப்பா ஆகியவற்­று­டன் சீனா உள்­ளிட்ட சில ஆசிய நாடு­களில் கொவிட்-19 பெருந்­தொற்று மீண்­டும் தலை­யெ­டுப்­ப­தால் 2023ஆம் ஆண்­டின் வளர்ச்சி பாதிக்­கப்­படும் என ஆய்­வில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

ஆயி­னும் பெருந்­தொற்று மிகுந்­தி­ருந்த 2021ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் பொரு­ளி­யல் நில­வ­ரம் இனி­

வ­ரும் ஆண்­டு­களில் சிறப்­பா­கவே இருக்­கும் என மத்­திய வங்­கி­யின் ஆய்வு தெரி­விக்­கிறது. "எல்­லாம் சரி­யாக நடந்­தால் இந்­தி­யாவை நோக்கி வரக்­கூ­டிய வெளி­நாட்டு முத­லீ­டு­கள் அடுத்த ஒன்று அல்­லது இரண்டு ஆண்­டு­களில் கணி­ச­மான வளர்ச்­சி­யைப் பெறும்," என்று தனி­யார் முத­லீட்டு நிறு­வ­மான ஈனாம் ஹோல்­டிங்­ஸின் முத­லீட்­டுப் பிரிவு இயக்­கு­நர் ஸ்ரீதர் சிவ­ராம் தெரி­வித்து உள்­ளார்.

2021ஆம் ஆண்­டில் மூன்­றா­வது தொற்று அலை வீசி­ய­தற்­குப் பிறகு இந்­தி­யப் பொரு­ளி­யல் படிப்­ப­டி­யாக ஏற்­றம் காணத் தொடங்­கி­யது. தேங்­கிக் கிடந்த விற்­பனை மீண்­டும் எழத் தொடங்­கி­ய­தாக பய­னீட்­டா­ளர் பொருள் விற்­பனை நிறு­வ­ன­மான வோல்­டா­ஸின் தலைமை நிர்­வாக அதி­காரி பிர­தீப் பக்‌ஷி கூறி­னார்.

அதே­போல விருந்­தோம்­பல், பய­ணம் மற்­றும் விடு­முறை ஓய்வு தொடர்­பான சேவை­க­ளுக்­கான தேவை­யும் 2019 செப்­டம்­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் இவ்­வாண்டு செப்­டம்­ப­ரில் 7.4 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக மொத்த உள்­நாட்டு உற்­பத்­தித் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.