பொருளியலுக்கு ரூ.10,000 கோடி பங்களித்த 'யூடியூப்'

பொருளியலுக்கு ரூ.10,000 கோடி பங்களித்த 'யூடியூப்'

1 mins read
0e020b64-0592-470a-a936-3e31864b4328
-

புது­டெல்லி: சமூக வலைத்­த­ள­மான 'யூடி­யூப்' மூலம் இந்­தி­யப் பொரு­ளி­ய­லுக்­குக் கடந்த ஆண்­டில் ரூ.10,000 கோடி மதிப்­பி­லான பங்­க­ளிப்பு கிடைத்­துள்­ள­தாக 'ஆக்ஸ்­ஃபர்ட் எக்க­னா­மிக்ஸ்' அமைப்பு தெரி­வித்து உள்­ளது. இந்­தி­யப் பொரு­ளி­ய­லில் 'யூடி­யூப்' வலைத்­த­ளத்­தின் தாக்­கம் குறித்த அறிக்­கையை அது வெளி­யிட்­டது.

அதில், "இந்­தி­யா­வில் 4,500க்கும் மேற்­பட்ட 'யூடி­யூப்' சேனல்­கள் 10 லட்­சத்­துக்­கும் அதி­க­மான சந்­தா­தா­ரா்­க­ளைக் கொண்­டுள்­ளன. கடந்த ஆண்­டில் ரூ.1 லட்­சத்­துக்­கும் அதி­க­மாக வரு­வாய் ஈட்­டிய இந்­திய 'யூடி­யூப்' ஒளிவழிகளின் எண்­ணிக்கை 60% அதி­க­ரித்­துள்­ளது.

"இந்­தி­யா­வின் 'யூடி­யூப்' மூலம் 750,000க்கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­பு­கள் கடந்த ஆண்­டில் உரு­வா­கி­யுள்­ளன. இரண்­டில் ஒரு பய­னாளா் திறன் மேம்­பாட்­டுக்­காக 'யூடி­யூப்'பை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனா். புதிதாக வேலைதேடு­வோரில் 45 விழுக் காட்டினர் 'யூடி­யூப்' மூல­மா­கத் தங்­கள் திறனை மேம்­ப­டுத்­திக்­கொண்­டனா்.

"வழக்­க­மான கல்வி கற்­பித்­தல் முறைக்கு மாற்­றாக 'யூடி­யூப்' தளம் உள்­ள­தா­கக் கல்­வி­யா­ளா்­கள், மாண­வா்­கள் மற்றும் பெற்றோா் நம்­பு­கின்­றனா். 'யூடி­யூப்' மூல­மா­கக் குழந்­தை

­க­ளுக்கு கற்­பிப்­பது சிறப்­பாக உள்­ள­தென 83% பெற்றோா் கருத்து தெரி­வித்­துள்­ளனா்," என்கிறது அறிக்கை.