பாலியல் தொழில்: தப்பியது தமிழகம்

பாலியல் தொழில்: தப்பியது தமிழகம்

1 mins read
1bdbb963-dbbf-40bb-9fe0-6132277a4594
-

புதடெல்லி: இந்தியாவில் பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய தகவல்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது. பூர்வீக பாலியல் தொழி லாளர்கள் அதிகம் உள்ள மாநி லங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் தென் மாநிலங்கள் உள்ளன. அதன்படி, 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்களுடன் ஆந்திரா முதலிடத்திலும் 1.16 லட்சம் பேருடன் கர்நாடகா இரண்டாம் இடத்திலும் 1 லட்சம் பேருடன் தெலுங்கானா மூன்றாம் இடத்தி லும் உள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தப் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. புலம்பெயர்ந்த மற்றும் பூர்வீக பாலியல் தொழி லாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 6.6 லட்சம் பேர் பாலியல் தொழில் செய்கின்றனர். 2ஆம் இடத்தில் குஜராத்தும் 3ஆம் இடத்தில் டெல்லியும் இந்தப் பட்டியலில் உள்ளன.