திருவனந்தபுரம்: உலகக் கிண்ண காற்பந்து இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அன்று கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்பந்து ரசிகர்கள் விடிய, விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அன்று மட்டும் கேரளாவில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக கேரள மதுபான விற்பனை மைய (பெவ்கோ) தலைமை நிர்வாக இயக்குநர் யோகேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
"கேரளாவில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 33 முதல் 34 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடை
பெறும். ஆனால் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது. அன்று வழக்கத்தைவிட ரூ.15 கோடி அதிகமாக விற்பனை நடந்தது," என்று அவர் கூறினார்.

