அமித் ஷா: போதைப்பொருள் கும்பல் இரண்டு ஆண்டுகளில் முற்றிலும் முடக்கப்படும்

2 mins read
c4a26167-a405-4a0b-8f28-660d0299bea7
-

புது­த­டெல்லி: போதைப் பொருள் கடத்­த­லில் ஈடு­ப­டு­ப­வர்­களை தப்­ப­வி­டக்­கூ­டாது என மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா வலி­யு­றுத்தி உள்­ளார்.

போதைப் பொருள்­கள் கடத்­தல் பிரச்­சினை அடுத்த இரண்டு ஆண்­டு­களில் தீர்க்­கப்­படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நாட்­டில் உள்ள போதைப் பொருள் வலைப்­பின்­னலை மத்­திய அரசு அடை­யா­ளம் கண்­டுள்­ளது என்­றும் எவ்­வ­ளவு பெரிய கும்­ப­லாக இருந்­தா­லும், அடுத்த இரண்டு ஆண்­டு­களில் அந்­தக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் சிறை­யில் இருப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"நம் நாட்­டில் தீவி­ர­வா­தத்தை ஊக்­கு­விக்­கும் நாடு­கள், போதைப்­பொ­ருள் விற்­பனை மூலம் கிடைக்­கும் லாபத்தை தீவி­ர­வாத செயல்­களுக்கு பயன்­ப­டுத்­து­கின்­றன. இந்­தச் சட்­ட­வி­ரோத பணம் நமது பொரு­ளி­ய­லைப் படிப்­ப­டி­யாக பாதிக்­கும்.

"போதைப் பொருள் அச்­சு­றுத்­தலை தடுக்க மாநில அர­சு­கள், யூனி­யன் பிர­தேச அர­சு­களும் முன்­வர வேண்­டும். எல்­லை­கள், துறை­மு­கங்­கள், விமான நிலை­யங்­கள், மூல­மாக போதைப் பொருள்­கள் நுழை­வதை நாம் தடுக்க வேண்­டும்," என்று அமித் ஷா தெரி­வித்­துள்­ளார்.

நாட்­டின் எல்­லை­க­ளுக்கு மத்­திய அர­சு­தான் பொறுப்பு என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இந்த அடிப்­ப­டை­யில்­தான் போதைப் பொருள்­களை கைப்­பற்­றும் அதி­கா­ரம் எல்லை பாது­காப்­புப் படை­யி­ன­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது என்­றார்.

"போதைப் பொருள்­கள் வளை­குடா நாடு­களில் இருந்து கடத்தி வரப்­ப­டு­கின்­றன. இது தொடர்பு உள்ளவர்கள் கைதாகிறார்கள்.

"போதைப் பொருள் தொழிற்­சா­லை­கள் சீல் வைக்­கப்­ப­டு­கின்­றன. 12 மாநி­லங்­களில் திடீர் சோதனை நடத்­தப்­பட்டு பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்," என்று அமித் ஷா மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, டெல்லி காவல்­து­றை­யால் கைப்­பற்­றப்­பட்ட ரூ.1,513 கோடி மதிப்­புள்ள பல்வேறு போதைப்­பொ­ருள்­கள் நேற்று முன்­தி­னம் அழிக்­கப்­பட்­டன.