விமானப் பணிப்பெண், பயணி இடையே காரசார வாக்குவாதம்

விமானப் பணிப்பெண், பயணி இடையே காரசார வாக்குவாதம்

1 mins read
a3914340-4b4a-4254-8ca0-4dc46110ea9b
-

புது­டெல்லி: நடு­வா­னில் விமா­னம் பறந்து கொண்­டி­ருந்­த­போது, பயணி ஒரு­வ­ருக்­கும் விமா­னப் பணிப்­பெண்­ணுக்­கும் இடையே நிகழ்ந்த கார­சார உரை­யா­டல் தொடர்­பான காணொ­ளிப் பதிவு சமூக ஊட­கங்­களில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.

துருக்­கி­யில் இருந்து டெல்­லியை நோக்கி வந்த இண்­டிகோ விமா­னத்­தில், பய­ணி­க­ளுக்கு வழங்­கப்­படும் உணவை தேர்வு செய்­வது தொடர்­பாக இரு­வ­ருக்­கும் இடையே வாக்­கு­வா­தம் மூண்­டது.

அப்­போது அந்­தப் பயணி, "நீங்­கள் பய­ணி­க­ளின் வேலைக்­கா­ரர்­கள்," என்று கோப­மா­கக் குறிப்­பிட, அதற்கு, "நான் உங­கள் பணி­யா­ளர் மட்­டுமே, வேலைக்­கா­ரர் அல்ல," பதி­லடி கொடுக்­கி­றார் விமா­னப் பணிப்­பெண்.

இந்த மோத­லால் கோப­ம­டைந்த பயணி, "ஏன் இப்­படி உரக்­கப் பேசு­கி­றீர்­கள், வாயை மூடுங்­கள்," என்று சொல்ல, பதி­லுக்கு பய­ணியை நோக்கி "வாயை மூடுங்­கள்" என்­கி­றார் விமா­னப் பணிப்­பெண்.

இந்­தச் சம்­ப­வம் குறித்து மத்­திய விமா­னப் போக்­கு­வ­ரத்து ஒழுங்­கு­முறை ஆணை­யம் விசா­ரணை நடத்தி வரு­வதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.