சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் மரணம்

சிக்கிம் விபத்தில் 16 ராணுவ வீரர்கள் மரணம்

1 mins read
fc03093e-c2e7-424b-87a3-c1d93012f272
விபத்துக்குள்ளான இந்திய ராணுவத்தின் லாரி. படம்: இந்துஸ்தான் டைம்ஸ் -

சிக்கிம்: இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் நேர்ந்த வாகன விபத்தில் 16 ராணுவ வீரர்கள் மாண்டனர்.

வட சிக்கிமில் உள்ள ஸேமா பகுதியில் வெள்ளிக்கிழமையன்று (23 டிசம்பர்) விபத்து நிகழ்ந்தது.

இந்திய ராணுவத்தின் லாரி ஒன்று மேடான பகுதியில் வழுக்கி விழுந்ததால் அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

விபத்துக்குள்ளான லாரி உட்பட மூன்று வாகனங்கள் அணிவகுத்தபடி செட்டர்ன் பகுதியில் பயணத்தைத் தொடங்கியிருந்தன.