சீன-இந்திய எல்லையில் ஆயுத மோதல் ஆபத்து பற்றி கவலை

சீன-இந்திய எல்லையில் ஆயுத மோதல் ஆபத்து பற்றி கவலை

2 mins read
a6e323f2-699b-4287-8870-55addfdd0034
-

புது­டெல்லி: சீனா­வும் இந்­தி­யா­வும் தங்­கள் எல்­லை­யில் படை­ப­லத்­தைக் கூட்டி வரு­கின்­றன. இந்­நி­லை­யில், டிசம்­பர் 9ஆம் தேதி இரு தரப்பு வீரர்­களும் கைக­லப்­பு­களில் ஈடு­பட்­ட­தா­க­வும் பல வீரர்­கள் காயம் அடைந்­த­தா­க­வும் தக­வல்­கள் வெளி­யா­யின.

இத­னி­டையே, அத்­த­கைய கைகலப்­பு­கள் எந்த நேரத்­தி­லும் ஆயுத மோத­லாக வெடிக்­கக்­கூ­டிய ஆபத்து இருப்­ப­தாக வல்­லு­நர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். அரு­ணாச்­ச­லப்­பி­ர­தேச மாநி­லத்­து­டன் கூடிய சீனா­வின் எல்­லை­யில் அந்தக் கைக­லப்பு நடந்­தது.

மொத்­தம் 3,488 கி.மீ. எல்லை பகு­தி­யின் கிழக்குப் புறத்­தில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளா­கவே இரு தரப்­பு­களும் பெரிய அள­வில் ஆயு­தங்­களை வேக­மாக குவித்து இருக்­கின்­றன. அதே­வே­ளை­யில், இரு தரப்­பு­களும் பேச்­சு­வார்த்தையையும் நடத்தி­ வரு­கின்­றன.

கிழக்கு லடாக் எல்லை பிரச்­சினை தொடர்­பாக இந்­திய-சீன ராணுவத் தள­ப­தி­க­ளுக்கு இடையே இம்­மா­தம் 20ஆம் தேதி 17வது சுற்று பேச்­சு­வார்த்தை நடந்­தது.

அந்­தப் பேச்சு ஆக்­க­பூர்­வ­மாக இருந்­த­தாக இரு நாடு­களும் வெளி­யிட்ட கூட்­ட­றிக்கை தெரி­வித்­தது.

இந்­தியா-சீனா எல்­லைக் கோடு தெளி­வாக இன்­ன­மும் வரை­ய­றுக்­கப்­ப­ட­வில்லை. இத­னால் இரு தரப்பு­க­ளுக்­கும் இடை­யில் அடிக்கடி மோதல் இடம்­பெற்று வரு­கிறது.

எல்லைப் பதற்­றத்­தைத் தணிக்க இரு நாட்டுத் தலை­வர்­க­ளின் வழி­காட்­டுதலின்படி பேச்­சு­ நடந்து வரு ­வ­தா­க­வும் கிழக்கு லடாக் எல்லைப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண்ப­தன் தொடர்­பில் நடந்த 17வது பேச்சு வெளிப்­ப­டை­யாக இருந்­த­தா­க­வும் கூட்­ட­றிக்கை கூறியது.

அதோடு, மட்­டு­மின்றி எல்லை பிரச்­சி­னை­க­ளுக்கு விரை­வில் தீர்வு­கண்டு, இரு தரப்பு உறவை மேம்­படுத்தி, ஆக்­க­பூர்­வ­மான முறை­யில் இரு நாடு­களும் முன்­னேற தொடர்ந்து ராணுவத் தள­ப­தி­கள் அள­வி­லும் தூத­ரக அள­வி­லும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வது என இணக்­கம் ஏற்­பட்டுள்­ள­தா­கவும் கூட்­ட­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, இந்­திய-சீன படை­க­ளி­டையே எல்­லை­யில் நடந்த மோதல் குறித்து நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வை­யில் விவா­திக்க அனு­மதி மறுத்­த­தால் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து கூச்­ச­லிட்டு கூட்­டத்தைப் புறக்­கணித்தனர்.