தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போர் விமானியாகத் தேர்வாகி இஸ்லாமியப் பெண் சாதனை

1 mins read
59cfd471-89a0-45d5-a1e9-144bf27d5cf1
-

லக்னோ: சானியா மிர்சா (படம்) என்ற இஸ்லாமிய இளம்பெண் இந்திய விமானப் படையில் போர் விமானியாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், மிர்சா பூர் அருகே உள்ள ஜசோவர் கிரா மத்தைச் சேர்ந்தவர் தொலைக்காட்சி பெட்டிகளைப் பழுதுபார்ப்பவரான ஷாகித் அலி. இவரது மகளான சானியா மிர்சா, இந்தியாவின் முதல் பெண் போர் விமானி அவ்னி சதுர் வேதியை தன் முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்றி வருகிறார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மையத் தேர்வில் 149வது ரேங்க் எடுத்து சாதனை படைத்தார். மொத்தமுள்ள 400 இடங்களில் போர் விமானிக்கான பிரிவில் இரு பெண்களுக்கு இடம் கிடைத்தது. அதில் ஒருவராக தேர்வாகி உள்ளார் சானியா. இவர் புனே தேசிய பாதுகாப்பு மையத்தில் வரும் 27ஆம் தேதி இணைய உள்ளார். தங்களது குடும்பத்தை மட்டுமன்றி ஒட்டு மொத்த கிராமத்தையும் சானியா பெருமைப்படுத்தியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.